Friday, 23 April 2010

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மூக்குடைபட்ட இந்தியா


2008ஆண்டு பிற்பகுதியில் பிரித்தானியாவில் உள்ள சிலஇந்தியக் கைகூலிகள் வெளிநாடுகளில் வாழ் தமிழர்கள் மத்தியில் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டுமா என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்று பேசத் தொடங்கிவிட்டனர். இந்திய உளவுத்துறை தமிழர்கள் போராட்டம் தோற்கடிக்கப் பட்டபின் தமிழர்கள் மத்தியில் தனிநாட்டுக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று கணக்குப் போட்டிருந்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பெரும்பாலான தமிழகள் பங்கெடுக்க மாட்டார்கள் என்று இந்திய உளவுத் துறை கணக்கும் போட்டிருந்தது.

தமிழர்களில் பலர் 1977இல் இலங்கையில் நடந்த தேர்தல் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பே என்று வாதிட்டனர். இந்தியக் கைக்கூலிகள் தனிநாடு தேவையா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு நடத்துவதற்கு சரியான ஆதரவு மக்கள் மத்தியில் இல்லை என்பதை அறிந்தவுடன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பு என்ற கோரிக்கையை தமிழமக்கள் முன் வைத்தனர். சில தீவிர தமிழ்த் தேசியவாதிகளும் இந்த இந்தியக் கைகூலிகளுடன் இணைந்து கொண்டனர். ஆனால் பல தமிழ்த் தேசிய ஆதரவு அமைப்புக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பை ஆதரிக்கவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைக் குழுவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பு என்பது எமது போராட்டத்தின் அத்திவாரத்தை அது சரியானதுதான என்று ஆட்டிப் பார்ப்பது போன்றது என்றார். இன்னொருவர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பு தம் உயிர்களைத் தனிநாட்டுக்காக உயிர் துறந்த பல ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப் படுத்துவது போன்றது என்றார். ஆனாலும் இந்தியக் கைக்கூலிகள் விட்டபாடில்லை வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பை நடத்துவதே என்று தீர்மானித்தனர். இந்த வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தால் தமிழ்த்தேசியத்து எதிரான வாதம் பலம் பெற்றுவிடும் என்று உணர்ந்த தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் தாமும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பிற்கு முன்னின்று உழைத்தனர்.

கனடாவில் வாக்கெடுப்பு நடந்த பின் இந்திய ஆரியப் பேய்களின் ஒன்றான கேணல் ஹரிகரன் 300,000 தமிழர்கள் வாழும் கனடாவில் 48,000 தமிழர்கள் மட்டும் வாக்களித்ததை கணக்கில் எடுக்கத் தேவையில்லை என்று பிதற்றினார். ஆனால் 300,000 தமிழர்களில் 60,000 மட்டுமே வாக்களிக்கும் தராதரமும் வசதியும் பெற்றிருந்தனர் என்றும் அவர்களில் 40,000பேர் வரையில் வாக்களிக்கலாம் என்று தாம் எதிர்பார்த்ததாக தெரிவித்த தமிழ்த் தேசியவாதிகள் 48,000பேர் வாக்களித்தது பெரு வெற்றி என்றனர். இதன்பின் இந்தியா ஆய்வாளர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு பற்றி வாய்திறக்கவில்லை.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கொச்சைப் படுத்த முயன்ற இந்தியாவிற்கு உலகெங்கும் வாழ் தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு தங்கள் முழு ஆதரவைத் தெர்வித்து இந்தியாவின் சதியை முறியடித்தனர். இப்போது தமிழர்கள் இன்னொரு இந்தியச் சதியை முறியடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள்.
  • வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு என்ற போர்வையில் சில இந்தியக் கைக்கூலிகள் தமிழ்த் தேசியப் போர்வை போர்திக் கொண்டு தமிழர்கள் மத்தியில் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கு உண்டு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...