
நேற்றோரு நட்பால் நெகிழ்ந்திருந்தேன்
ஊற்றெடுத்த அன்பால் மகிழ்ந்திருந்தேன்
பாட்டோடு பொருளாயிருந்தோம்
காற்றோடு காற்றாய் கலந்திருந்தோம்
வார்த்தைகளில் இனிய வருடல்
வார்த்தைகளில் உடல்கள் உரசல்
வார்த்தைகளில் இனித்த இதழ்கள்
வார்த்தைகளில் கனிந்த இணைவு
உற்றது உளமாரச் சொன்னால்
அற்றது ஆங்குபொருந்துமென்றார்
கற்றதது மனதில் வந்தது இங்கு
உற்றதை உவகையுடன் உரைத்தேன்
கொதித்தாள் உண்மை கேட்டு வெகுண்டாள்
துரோகியெனத் துவைத்தாள் என் மனதை
என்ன நட்பிதென்று உணருமுன்னே
காற்றில் இணைந்த நட்பு கலைந்தோடியது
No comments:
Post a Comment