Thursday, 4 February 2010
ராஜபக்சவை சரித்திர நாயகனாக்கும் பன்னாட்டுப் பன்னாடைகள்.
ஒரு தீரமும் தியாகமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி சகல போர் நியமங்களுக்கு எதிராக போர் புரிந்து மழுங்கடிப்பதற்கு பலநாடுகள் ரஜ்பக்சேக்களுக்கு உதவின. பல நாடுகள் அந்த உதவியைத் திரைமறைவாகவே செய்தன. அதனால் ராஜபக்சேக்கள் தம்மை தாமே ஒரு வீரம் நிறைந்த கதாநாயகர்களாகச் சித்தரிக்கின்றனர். பன்னாட்டு அரங்குகளில் இலங்கைப் பிரச்சனைபற்றி எழுப்பப் பட்ட போதேல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் இலங்கை அரசு ஒரு ஜனநாயக முறைப்படி தெரிந்தெடுக்கப் பட்ட அரசு என்றும் கூறப்படும்.
தனது கையைக் கழுவும் அமெரிக்கா.
இலங்கையில் போர்குற்றம் நடந்தது என்று அறிக்கைவிட்டதன் மூலம் இலங்கை இனக்கொலையால் தனது கைகளில் படிந்த இரத்தத்தை அமெரிக்கா கழுவ முயல்கிறது. அந்த அறிக்கையை எதிர்த்து நிற்பதாக ராஜபக்சேக்கள் கூறியதுடன் போரில் அமெரிக்க விடுதலைப் புலிகளைப் பாதுகாக்க முற்பட்டது என்றும் மீண்டும் அது சரத் பொன்சேக்கவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்க முயல்கிறது என்றும் சிங்கள மக்களை நம்ப வைப்பதில் ராஜபக்சேக்கள் வெற்றி கண்டனர். இந்தப் பன்னாட்டுச் சதிகளை எல்லாம் தம்மால் மட்டுமே முறியடிக்க முடியும் என்றும் தம்பட்டம் அடிக்கின்றனர். இதன் உண்மை அல்ல நாம் அன்றும் இன்றும் என்றும் சிங்களவர் பக்கமே நின்றோம் நிற்கிறோம் என்ற உண்மையை அமெரிக்கா என்றும் வெளிப்படுத்தப் போவதில்லை.
சட்டையைக் கழற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
விடுத்லைப் புலிகள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி சாமாதனப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வேளை அவர்களைப் பயங்கரவாத இயக்கம் எனப் பட்டியலிட்டு அவர்களைப் பலவீனப் படுத்தியது ஐரோப்பிய ஒன்றியம். அவர்களைன் நிதி மூலங்களை முடக்க இலங்கைக்கு உதவியது ஐரோப்பிய ஒன்றியம். ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஒழிக்க ஜனநாயக அரசுக்கு உரிமை உண்டு என்று வேதம் ஓதிய சாத்தான் ஐரோப்பிய ஒன்றியம். இறுதிப்போரில் சரணடைய வந்தவர்களைக் கொன்றதையும் அப்பாவிகளை உயிரோடு புதைத்ததையும் அறிந்தும் அறியாமல் இருந்து கொண்டு தனது இரத்தக் கறை படிந்த சட்டையை ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகையை இடை நிறுத்துவதன் மூலம் கழற்றி விடப் பார்க்கிறது ஐரோப்பிய ஒன்றியம். வர்த்தகச் சலுகை நிறுத்தினால் தாம் பயப்படப் போவதில்லை பணியப் போவதில்லை என்று முழங்கி வீரர்களாகினர் ராஜபக்சக்கள்.
இந்திய அரசு என்றொரு ஆரியப் பேய்கூட்டம்.
மூடி மறைக்கப் பட்ட ராஜீவ் கொலையின் பின்னணியை இதுவரை அறிய முயலாத இத்தாலிச் சனியாளின் பாவாடைக்குள் முடங்கிய காங்கிரஸ் என்னும் ஆரியப் பேய்களின் அரசு இலங்கைக்கு தமிழ்த் தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க சகல உதவிகளையும் செய்தது. ஆனால் ராஜபக்சக்கள் தாம் இந்தியாவின் போரை நடத்தி வென்று கொடுத்தோம், காங்கிரசை வெல்ல வைத்தோம், இந்தியாவால் முடியாததை நாம் செய்தோம் என்று முழங்கும் போது உண்மையை உரைக்க முடியாமல் மௌனியாக நிற்கிறது. சனல்-4 தொலைக்காட்சி தமிழர்கள் நிர்வாணமாகப் படுகொலை செய்யப் படுவதை அம்பலப் படுத்தியபோது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அது தொடர்பாக உடன் விசாரணைக்கு உத்தரவிடுவதாக அறிவித்தார். இன்றுவரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று பற்றியாரும் அறியார். இலங்கை இனக் கொலையில் இந்தியப் படைகளின் சம்பந்தம் பற்றி வெளிக் கொணரக் கூடிய காணொளிப்பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறியத்தான் அந்த விசாரணையா? அந்தமாதிரி எல்லாம் இலங்கை இனக்கொலைக்கு நேரடித் தொடர்பு உடையதாகக் க்ருதப் படும் ஆரியப் பேய்கள் ராஜபக்சக்கள் இந்தியாவின் போரை நாம் நடத்தி வென்று கொடுத்தோம் என்று மார்தட்டும் போது மௌனியாக நின்று ராஜபக்சேக்களை சரித்திர நாயகர்கள் ஆக்குகின்றன. அவை மட்டுமல்ல இந்திய நிர்பந்தங்களுக்கு அடி பணியாமல் நின்றோம், இந்தியாவை இராஜ தந்திர ரீதியில் ஏமாற்றினோம் என்றுகூட ராஜபக்சக்கள் முழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
எல்லாம் வெட்டவெளிச்சமாக தான் தெரிகிறது. யார் துரோகிகள்.. யார் சதிகாரர்கள் என்று ஆனாலும் நாமால் என்ன செய்ய முடிகிறது.
வெட்கி தலை குனிவதை தவிர. இன்னொரு முத்து குமாரானை தீக்கு தாரை வார்த்தாலும் இவர்கள் திருந்த போவதில்லை. நம்மை நாமே காப்பாற்றி கொள்வதை தவிர வேறொன்று செய்வதற்கில்லை. இல்லையெனில் தீக்கு நம்மை தாரை வார்த்து விட்டு முதலை கண்ணீர் வடிக்க ஒரு கூட்டம் நம் பின்னால் தயாராக இருக்கிறது.
பிராந்திய நலன்களுக்கு அப்பால் இதுவெல்லாம் பிசுக்கோத்து!வாசற் படியில் வந்து சீனாக்காரன் நிற்கப் போகிறானே என்பதே வல்லரசுக் கனவாளர்களின் கவலையே தவிர,ஈழத் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகிரார்கள் என்பதல்ல!அமெரிக்காவோ,அய்ரோப்பிய ஒன்றியமோ,இந்தியாவோ எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்காது, நம்முடைய தலைவர்களினதும்,மக்களினதும் அரசியல் நகர்வுகளே அதனை சாத்தியமாக்கும்!
பன்னாடைகளேதான்! கொடிய சிங்களவர்களை அணைத்துக் கொண்டு நல்ல தமிழர்களைக் கைவிட்டு விட்டார்கள்.
Post a Comment