
என்வீட்டில் ஒரு நாய் உண்டு
வளமான என் வீட்டைக் காக்க
ஒருவருக்கும் தீங்கு செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்
முன் வீட்டுக் கோழி வந்து
என் முற்றத்தை அசிங்கப்படுத்தும்
என் நாய் ஒன்றும் செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்
பின் வீட்டில் இருந்து ஒரு மாடு வந்து
என் தோட்டத்தை நாசமாக்கும்
என் நாய் ஒன்றும் செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்
பக்கத்து வீட்டில் வாழும் என் தம்பி
தன் நாயோடு என் வீடு வந்தால்
எகிறிப்பாயும் என் நாய்
என் வீடு போர்க்களமாகும்
2010இல் செங்கல்பட்டு
1983இன் வெலிகடையாகிறது
நாளை பாக்குநீரிணை
முள்ளி வாய்க்காலாகுமா
3 comments:
உங்கள் வலியை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆஹா அருமை அருமை உங்கள் எழுத்து மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...
Post a Comment