



ஹரி பொட்டர் திரைப்படங்களில் பத்மா பட்டீலாக நடித்த அfஜான் அசாத் என்னும் நடிகை அவரது சகோதராலும் தந்தையாலும் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் விபசாரி எனவும் விமர்சிக்கப்பட்டார். இதற்குக் காரணம் அவர் ஒரு இந்து இளைஞனுடன் காதல் கொண்டமையே.
இந்திய திரைப்பட நடிகைபோல் தோற்றமளிக்கும் 22 வயதான ஹரி பொட்டர் திரைப்படங்களில் பத்மா பட்டீலாக நடித்த அfஜான் அசாதை தாக்கியதாக அவரது 53வயது தந்தை அப்துல் அசாத்தும் 28வயதான அண்ணன் அஷ்ரப் அசாத்தும் மான்செஸ்டர் நீதிமன்றில் கொலைப் பயமுறுத்தல் குற்றச் சாட்டில் நிறுத்தப்பட்டனர். விசாரணைக்கு அfஜான் அசாத் சமூகமளிக்காமல் விட்டுவிட்டார். இதனால் அவரது தந்தை விடுதலை செய்யப்பட்டார். அவரது சகோதரன் மீதான தீர்ப்பை அடுத்த மாதம் நீதிமன்றம் அறிவிக்கும்.
No comments:
Post a Comment