Thursday 2 December 2010

காணொளி: தமிழர் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து தலை தெறிக்க ஓடிய ராஜபக்சே







கொட்டிய பனியிலும் கடும் குளிரிலும் இலண்டனுக்கு பயணம் செய்த இலங்கை அதிபர் ராஜ்பக்சவிற்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தாயிரத்திற்கு மேலானவர்கள் இதில் பங்குபற்றினர்.

முன்பு ஒரு முறை இலங்கை அதிபர் பிரித்தானியாவிற்கு மேற் கொள்ள இருந்த பயணம் அவர் போர் குற்றத்திற்காக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் கைவிடப்பட்டது. பின்னர் அதிபர் ராஜபக்சே பிரித்தானிய மகராணிக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி தன்னை பிரித்தானியப் பயணத்தின் போது கைது செய்யாமல் இருக்க ஆவன செய்யும்படி மன்றாட்டமாகக் கேட்டுகொண்டார். இதனை அடுத்து ஒரு நாட்டுத் தலைவர் என்றரீதியில் அவருக்கு அரசதந்திர பாதுகாப்பு உண்டு என்று பிரித்தானிய நீதித்துறை முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பிரித்தானிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உரையாற்ற ராஜபக்சே பிரித்தானியா வந்தார். அவர் வருகை தந்தபோது பல்லாயிரக் கணக்கான தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இலண்டன் ஹீத்துரூ விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். ( சில இந்திய ஊடகங்கள் சிங்களவர்களிடம் வாங்கும் கைக்கூலிக்கு விசுவாசமாக நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று செய்தி வெளிவிட்டன). பிரித்தானியக் காவல்துறை அவரை இரகசியமாக விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றியது

கைகழுவி விட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
02/12/2010 வியாழக்கிழமை ராஜபக்சே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உரையாற்ற ஏற்பாடாகி இருந்தது. இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி மேலும் ஒரு காணொளிப்பதிவை வெளியிட்டது. தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஒரு போர்க்குற்றவாளியை அழைத்த பழியில் இருந்து தப்பிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பாதுகாப்புக் காரணங்களைக்காட்டி ராஜபக்ச ஆற்ற இருந்த உரையை இரத்துச் செய்துவிட்டது.

பாவம் பணம் வீணாகியது
ஒரு பொதுத் தொடர்பு நிறுவந்த்திற்கு பெரும் பணம் கொடுத்துத்தான் மஹிந்த தனது பயண் ஏற்பாட்டையும் ஆக்ஸ்போர் பலகலைக்கழ்க உரையையும் ஏற்பாடு செய்திருந்தார். அவர் எந்த ஒருபொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. Bell Pottinger என்பதுதான் அந்த நிறுவனம் என்று சொல்லப்படுகிறது.


தலைதெறிக்க ஓடிய ராஜபக்ச
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பாதுகாப்புக் காரணங்களைக்காட்டி ராஜபக்ச ஆற்ற இருந்த உரையை இரத்துச் செய்துவிட்டதைத் தொடர்ந்து பிரித்தானியா வாழ் தமிழர்கள் இலண்டன் மாபிள் ஆர்ச்சில் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு முன் ஆற்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதைக் கேள்விப்பட்ட ராஜபக்ச யாருக்கும் தெரியாமல் தலைதெறிக்க அங்கிருந்து தப்பி ஓடி இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுவரகத்துக்குள் தஞ்சம் புகுந்து கொண்டார். 02-12-2010 வியாழன் மாலை நான்கு மணியில் இருந்தே தமிழர்கள் மாபிள் ஆர்ச்சில் கூடி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடியது யாருக்கும் தெரியாது. தனது மாலை ஏழு மணிச் செய்தியில் ராஜபக்சே தப்பி ஓடிய செய்தியை சனல்-4 ஒளிபரப்பியது. அதைக்காண் இங்கு சொடுக்கவும்: சனல்-4

சனல்-4 செய்தி ஒளிபரப்பிய நேரம் கிட்டத்தட்ட இரவு 7-30. மாபிள் ஆர்ச்சில் கூடி ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களில் பலர் அப்போது கலையத் தொடங்கிவிட்டனர். எஞ்சி இருந்த தமிழர்கள் பின்னர் இலங்கைத் தூதுவராலயத்தின் முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு மிகப் பலத்த காவல்துறைப்பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்தது.

ராஜபக்சவை ஒதுக்கிய பிரித்தானிய அரசு
இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்ட ராஜபக்சவை எந்த அரச பிரதிநிதிகளும் அதிகார பூர்வமாகச் சந்திக்கவில்லை. பிரித்தானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோம் பொக்ஸ் மட்டும் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற் கொண்டார். லியாம் பொக்ஸ் இலங்கை அரசின் செலவில் ஏற்கனவே தனது விடுமுறையை இலங்கையில் பல தடவை கழித்தவர்.

தப்பினோம் பிழைத்தோம் என ஓடினார்கள்
மஹிந்த ராஜபக்சவுடன் பிரித்தானியா வந்தவும் ஜி எல் பீரிசும் சாஜி கமகே என்னும் இராணுவ அதிகாரியும் வியாழக்கிழமை இரவோடு இரவாக சிறப்பு வாடகை விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் வந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை மஹிந்த ராஜபக்சவுடன் பிரித்தானியா வந்த சாஜி கமகே என்னும் இராணுவ அதிகாரியைக் போர்குற்றத்திற்காக கைது செய்யப்பட பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

அதிருப்தி அடைந்த பிரித்தானிய அரசு
தனிப்பட்ட பயணம் என்று பிரித்தானியாவிற்குள் நுழைந்த ராஜபக்சவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் கட்சி தாவி ஜீ எல் பீரிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஏன் வந்தனர்? என்று பிரித்தானிய அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இப்படிப்பட்ட பயணங்களை இனி மேற் கொள்ளவேண்டாம் என்று அவரிடம் பிரித்தானிய அரசு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

3 comments:

Anonymous said...

2009இல் நிலத்தை முத்தமிட்டவர் 2010இல் நிலத்தில் விழுந்து புரண்டு அழுவாரோ தன்னை Oxfordஇல் பேச விடவில்லை என்று??????

Anonymous said...

இது போதாது இந்த கொலைவெறியனை நீதியின் முன் நிறுத்தும் வரை உலகத் தமிழா இவனை ஓட ஓட விரட்ட வேண்டும். இவனைப் போன்ற சண்டாளர்களுக்கு இனி வரும்காலத்தில் எந்த நாடும் உதவிட அஞ்சவேண்டும். புலம் பெயர் தமிழர்களே. பிரித்தானிய மக்களே சனல 4 செய்தி நிறுவனமே உங்கள் அனைவருக்கும ஈழததமிழனின் நன்றிகள்

Unknown said...

தனக்கு இலங்கையில் இல்லாத் அக்கறை வெள்ளைக்காரர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று கடந்தவருட முற்பகுதியில் முழங்கிய இவனுக்கு வெள்ளைக்கார நாட்டில் கிடைத்தது போதாது

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...