Saturday, 4 December 2010
தலிபான்களை அடக்க அமெரிக்காவின் புதிய துப்பாக்கி
ஆப்கானிஸ்த்தானில் தலிபான்களை அடக்குவதற்கென்று புதிய ரக துப்பாக்கிகளை அமெரிக்காஅறிமுகப்படுத்தியுள்ளது. XM25 Counter Defilade Target Engagement System அல்லது smart grenade launcherஎனப் பெயரிடப்பட்டுள்ள தோளில் சுமந்து செல்லக்கூடிய எறிகுண்டு செலுத்தித் துப்பாக்கிகள் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் கணனியும் பொருத்தப்பட்டுள்ளது. லேசர் தொழில் நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒளிந்து கொண்டிருந்து தாக்குதல் நடாத்தும் தலிபான்கள் மீது தாக்குதல் நடாத்த விமானப்படையே பயன்படுத்தப் படுகிறது. இது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக பல ஆண்டுகள் திட்டமிட்டு smart grenade launcher உருவாக்கப்பட்டுள்ளது இது 25மில்லிமீற்றர் குண்டுகளை 700 மீற்றர் தூரத்துக்குச் செலுத்தக் கூடியவை. இக்குண்டுகள் படும் இடத்தில் ஒரு கைக்குண்டு வீசப்பட்டது போல் வெடிக்கும். இது தாக்கி வெடிக்கும் இடத்தை மிகச் சரியாக முன்கூட்டியே தீர்மானிக்கலாம். இது சுவர்கள் பாறைகள் பதுங்கு குழிகள் போன்றாவை பின்னால் மறைந்திருக்கும் எதிரியை தாக்குவற்கு மிக வாய்ப்பாக அமைகிறது. முதன் முதலாக ஒரு துருப்பின் கையில் கணனி சார் தாக்குதல் முறைமை வழங்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தூரத்தில் உள்ள ஒரு இலக்கின் பின்னால் சரியான கணிப்புடன் கைகுண்டை வீசுவது போன்றது.
ஒரு துப்பாக்கியின் விலை முப்பதினாயிரம் அமெரிக்க டொலர்கள். பெண்டகன் 12500 துப்ப்பாக்கிகளை பயன்படுத்தவுள்ளது.
இப்போது உள்ள மற்ற சிறந்த துப்பாக்கிகளிலும் பார்க்க மூன்றுமடங்கு திறமையானதும் துல்லியமானதுமாகும் இந்த smart grenade launcher. இப்போது உள்ள மற்ற சிறப்பான துப்பாக்கிகளை மறைவின் பின்னால் இருக்கும் எதிரியை தாக்க வளைவான பாதையில் சுடுவதற்கு துருப்புக்கள் பல ஊகங்களை செய்ய வேண்டியுள்ளது. அந்த ஊகங்களை smart grenade launcherஇல் உள்ள கணனி செய்து கொள்ளும். இதுபற்றிய் ஊடகக் குறிப்புக்கள் இப்படிக் கூறுகின்றன:
The revolutionary advance involves an array of sights, sensors and lasers that reads the distance to the target, assesses elements such as air pressure, temperature, and ballistics and then sends that data to the microchip embedded in the XM25 shell before it is launched.
Previous grenade launchers needed to arc their shells over cover and land near the target to be effective.
"It takes out a lot of the variables that soldiers have to contemplate and even guess at," Lehner said.
If, for example, an enemy combatant pops up from behind a wall to fire at US troops and then ducks behind it, an XM25 gunner can aim the laser range finder at the top of the wall, then program the shell to detonate one meter beyond it, showering lethal fragmentation where the insurgent is seeking cover.
Use of the XM25 can slash civilian deaths and damage, the Army argues, because its pinpointed firepower offers far less risk than larger mortars or air strikes.
இந்தத் துப்பாக்கிகளுக்கு ஏற்ப தலிபான்கள் தங்கள் உத்திகளை இனி மாற்ற வேண்டி இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment