குடும்பப் பிரச்சனைகளால் இருதய நோய்கள் வர் வாய்ப்பு உண்டு என்று டென்மார்க்கில் கடந்த பத்து வருடங்களாக 4500 ஆண் பெண்களிடை செய்த ஆய்வின் பின் தெரிவித்துள்ளனர்.
Journal of Epidemiology and Community Health என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் Angina, கை நோவு, கழுத்துப் பிடிப்பு, வயிற்றுவலி, தாடை வலி போன்றவற்றை கொண்டுவரலாம்.
- Angina is a pain or discomfort in the chest and is usually caused by coronary heart disease. Some might experience focused pain only in their arm, neck, stomach or jaw.
நச்சரிக்கும் மனைவி அல்லது கண்வன் உள்ளவர்களுக்கு நச்சரிப்பு இல்லாத கணவன் அல்லது மனைவி உள்ளவர்களிலும் பார்க்க இருதய நோயான Angina வரும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பிரச்சனைக்குரிய பிள்ளைகள் உடையவர்களுக்கு நல்ல பிள்ளைகள் உள்ளவர்களிலும் பார்க்க இருதய நோயான Angina வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகள் மகிழ்ச்சியான குடும்பம் ஆரோக்கியத்தைக் கொண்டுவரும் என்று தெரிவித்தன.
No comments:
Post a Comment