

முகத்திற்கு அழகூட்டும்
இதயத்தின் இருப்பை வெளிக்காட்டும்
புன்னகை
கொலைகள் செய்ய
எனக்கு விருப்பமில்லை
சிலரின் மரண அறிவித்தல்
படிக்க விரும்புகிறேன்
நல்ல போருமில்லை
கூடாத அமைதியுமில்லை
என்றான் ஒரு அறிஞன்
மூர்க்கமான போரையும் கண்டோம்
மோசமான அமைதியும் காண்கிறோம்
எல்லோரும் இறப்பது நிச்சயம்
எல்லோரும் வாழ்வது நிச்சயமல்ல
வாழ்வாங்கு வாழ்வது யார்
கண்ணியத்தை அதிகாரம்
விவாகரத்துச் செய்ய
உலகம் அநாதையாகிறது
2 comments:
நல்ல போருமில்லை
கூடாத அமைதியுமில்லை
என்றான் ஒரு அறிஞன்
நல்ல கருத்து
"அடிதடி கொள்ளை கொலையழிவல்லால் அiதியை உலகில் யார்கண்டார்?
நிதமும் கொலைமேவும் கருவிபலகொண்டு நிலமைபழுதாக உழைப்போர்கள்."
இவ்வரிகள் யாழ் இந்துவின் ஆசிரியர் காலஞ்சென்ற கவிஞர் சொக்கன் நல்லைக் கந்தன் மீது
பாடிய திருப்புகழின் சில வரிகள். இது அரச மற்றும் அரசற்ற சகலரிற்கும் பொருந்தும்.
Post a Comment