Sunday, 12 December 2010
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்?
இலங்கையில் இலங்கை அரசபடையினாலும் இந்திய அமைதிப்படையினாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர் என்பதற்கான சரியான கணிப்பீடுகள் இருப்பதாகத் தெரிவில்லை.
செஞ்சிலுவைச் சங்கம் முன்பு ஒரு முறை வெளியிட்ட கணிப்பின் படி 1983இற்கும் 2002இற்கும் இடையில் அறுபதினாயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடையிலான மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்கிறது. ஆனால் தமிழர்களைக் கொல்வது 1956-இல் ஆரம்பித்துவிட்டது.
08-11-2010இலன்று ஏசியன் ரிபூனில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித்த கொஹென்ன இப்படி எழுதுகிறார்:
For over twenty seven years, our resources remained under utilized, were diverted to the war effort, sometimes haphazardly, enterprises struggled to survive, tourism and inward investment suffered seriously, the cream of our youth went gallantly and voluntarily to the front and many paid with their lives, others were maimed, while quite a few took the easy way out and left the country, and a country that was meant to be a beacon to the region, stagnated in the global backwater. There are 80,000 women widowed by the conflict. Now that the conflict is over and the guns are silenced, Sri Lanka has the opportunity to stand up, dust itself, and rejoin the world as a proud and confident country.
இதில் சிங்களவர்களும் அடங்குவர். இதில் அறுபதினாயிரம் தமிழர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். நவம்பர் 2010இல் இலங்கையில் 60,000 தமிழ் விதவைகள். இன்னும் 20,000 விதவைகள் வெளிநாடு சென்றிருக்கலாம். 5,000பெண்கள் கணவனுடன் இறந்திருப்பார்கள். மொத்தத்தில் 85,000 திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
85000 திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்குமிடத்தில் திருமணமாக 25இற்கு வயதுக்குக் குறைந்த ஆண்கள் 70,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முதிய ஆண்கள் 10,000பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் கொல்லப்பட்ட ஆண்கள் 165,000.
165,000 ஆண்கள் கொல்லப் பட்டிருக்குமிடத்தில் 145,000 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொகை 310,000.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தன்னார்வு தொண்டு நிறுவனமொன்று நடத்திய ஆய்வின் படி இலங்கையில் போரினால்250,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. 2009இல் மட்டும் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதுவும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment