கைப்பேசிப் பாவனையாளர்கள் பொதுவாக கைப்பேசிகள் வாங்கும்போது அதன் செயற்பாடுகளைப்பற்றியே கவலைப்படுவார்கள். கைப்பேசி நிலத்தில் விழுந்தால் என்ன ஆகும்? கைபேசி மழையில் நனைந்தால் என்ன ஆகும்? கைப்பேசியை சட்டைப்பையில் சாவிக் கொத்துடன் வைத்திருந்தால் அதில் கிறுக்கல் விழுமா? என்பவற்றைப்பற்றிக் கவலைப்படுபவர்கள் மிக்கக் குறைவு. ஆனால் இந்த மாதிரிக் கவலை உள்ளவர்களுக்கு JCB phone நல்ல பதில் தருகிறது
JCB phoneஇன் சிறப்பு அம்சங்கள்
1. நீருக்குள் விழுந்தாலும் பழுதடையாது. ஒருவர் இந்த JCB phoneஉடன் நிச்சலடித்தும் அது பழுதடையவில்லையாம்.
2. ஆவிக்குளியல் அறையிலும் வைத்திருக்கலாம். It can withstand 48 hours at 70C and 90 per cent-relative humidity.
3. தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு JCB phone உப்புத் தண்ணீரில் இருந்தும் பழுதடையவில்லையாம்.
4. கார் ஒன்று இதன் மேல் ஏறினாலும் பழுதடையாது
5. ஆறடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் பழுதடையாது.
6. -30 டிகிரி சென்ரிக்ரேட் குளிரையும் தாங்கும்.
எனது பிரச்சன. மறந்து போய் சட்டையுடன் சேர்த்து washing machine க்குள் கைப்பேசியையும் போட்டுவிடுவேன். ஆனால் JCB phone washing machine க்குள்அகப்பட்டால் பழுதடைந்து விடும். வாட்டர்லூவைச் சந்திக்காத நெப்போலியன் இல்லை.
2 comments:
ஜே சீ பீ கைபேசி எங்கே கிடைக்கும் ?
Dear brother Vinoth pl visit:
http://www.jcbphone.co.uk/
Post a Comment