விக்கிலீக்கின் நிறுவனர் ஜூலியான் அசங்கே இன்று நீதிமன்றில் தாக்கச் செய்த பிணைமனுவை ஏற்று பிரித்தானிய நீதிமன்றம் அவரை நிபந்தனைகளின் பேரில் பிணையில் விட முடிவு செய்தது ஆனால் சுவிடன் அரச சட்டவாளர்களின் எதிர்ப்பில் அவர் மீண்டும் சிறையிலிடப்பட்டுள்ளார். சுவிடன் அரச சட்டவாளர்களுக்கு அவர்கள் தரப்பு விவாதத்தை முன் வைப்பதற்கு இரு மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டது .
- கடவுச் சீட்டை கையளித்தல்
- ஒரு இடத்தில் மட்டும் இருத்தல்
- இரண்டு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட் பிணைப்பணம்
- நாற்பதினாயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் பொறுப்புப்பணம்
- தினசரி காவல் நிலையத்திற்கு செல்லுதல்
நீதி மன்றத்தின் முன் ஜூலியான் அசங்கேயின் ஆதரவாளர்கள் பலரும் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். பல ஊடகவியலாளர்களும் அங்கிருந்தனர்.
இரு பெண்களுக்கும் ஜூலியான் அசங்கே செய்தமை பிரித்தானியச் சட்டப்படி கற்பழிப்புக் குற்றம் ஆக மாட்டாது.
பொது உணர்விற்கு(common sense) கிடைத்த வெற்றி
ஜூலியான் அசங்கேஇற்கு பிணை வழங்கச் சம்மதித்தமை பொது உணர்விற்கு(common sense) கிடைத்த வெற்றி எனப்பலரும் தெரிவித்தனர்.
கடுமையான தடுப்புக்காவல்
ஜூலியான் அசங்கே மற்ற சிறைக்கைதிகளின் தொடர்புகள் அற்றவராகவும் பத்திரிகை தொலைக்காட்சி பார்க்க தடை செய்யப்பட்டவராகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment