
உங்களை இன்று மறந்த
எம்மவர்களை மன்னிப்போம்
உங்களைக் காட்டிக் கொடுத்த
துரோகிகளை மன்னிப்போம்
உங்கள் கல்லறைகள் சிதைத்த
கயவர்களை மன்னிப்போம்
அன்று முன்னூட்டம் கொடுக்காமல்
எம் பின்னடைவுகளை சாதகமாக்கி
இன்று பின்னூட்டம் கொடுத்து
உங்கள் தியாகங்களை
கொச்சைப்படுத்தும்
ஈனர்களை என்றும்
மன்னிக்க மாட்டோம்
3 comments:
மாவீரர்களுக்கு வீரவணக்கம்..
மானமுள்ள தமிழன் கொச்சைப்படுத்த மாட்டான்!தாள் பணிந்து வணங்குகிறோம் மா வீரர்களே! நன்றி,வேல் தர்மா!!!
எமக்காய் தம்உயிரீந்த அந்த தியாக புனித தீபங்களை நிந்திப்போரை நிச்சயம் மன்னிக்க மாட்டோம். ஆயிரம் இன்னல்கள் வந்திடினும் அவர்களை நாம் பூசிப்போம். வணங்குவோம். என் தாயைப் பழித்தவனை மன்னித்திடினும் எம் மாவீரரை நிந்திப்பவரை என்றும் மன்னிக்க மாட்டோம். மாவீரரே நீவிர் எம் தெய்வங்கள்.
Post a Comment