Friday, 29 October 2010
சோனியை(Sony)ஐயும் Facebookஐயும் ஆப்பிள் விழுங்குமா?
ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-பொட், ஐ-போன், ஐ-பாட் ஆகியவற்றால் பெரும் இலாபம் ஈட்டி வருகிறது. ஆப்பிளின் கைவசம் உள்ள பணக் கையிருப்பு 51பில்லியன் டொலர்களுக்கு மேலாக வளர்ந்து வருகிறது. ஆப்பிளுக்கு கடன் எதுவும் இல்லை. இவ்வளவு தொகை கையிருப்பு உள்ள நிறுவனங்கள் தமக்கு போட்டியாக உள்ள நிறுவனங்களை விலை கொடுத்து வாங்குவது வழக்கம். இந்த வாரம் ஆப்பிள் சோனி நிறுவனத்தை வாங்குமா என்ற தகவல் உலக பங்கு வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதையொட்டி சோனியின் பங்குகளின் விலையில் அதிகரிப்பும் ஏற்படுத்தியுள்ளது. சோனி நிறுவனத்தின் மொத்தப் பெறுமதி 40பில்லியன் டொலர்கள். இந்தப் பெறுமதி ஆப்பிளின் கையிருப்புக்குள் அடங்குகிறது அது மட்டுமா கடந்த ஆண்டு சோனி 41மில்லியன் டொலர் நட்டம் அடைந்துள்ளது.
வெறும் வதந்தி
சிலர் இந்த ஆப்பிள் சோனியை வாங்கும் என்ற செய்தி சோனியின் பங்கு விலைகளை உயர்த்த சிலர் வேண்டு மென்றே பரப்பிய வதந்தி என்றும் உலக பங்கு வர்த்தகள்கள் மத்தியில் பேசப் படுகிறது.
ஆப்பிளுக்கு பசி எடுத்துவிட்டது.
ஆப்பிளின் கையிருப்பில் இருக்கும் பெருந்தொகை நிதி அது வேறு நிறுவனங்களை நிச்சயம் வாங்கும் என்பதில் சந்தேகமில்லை என்று பலரும் கூறுகிறார்கள். ஆப்பிள் வாங்கக் கூடிய மற்ற நிறுவங்களாகக் கருதப் படுபவை Facebook, Adobe and Disney. இதில் அடொப் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் அண்மையில் ஒரு கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தன. ஆப்பிள் வெளியிட்ட ஐ-பாட்டில் அடொப்பின் flash player செயற்பட முடியாமல் இருந்ததே இதற்குக் காரணம். ஐ-பாட்டில் அடொப்பின் flash player செயற்பட முடியாமல் இருப்பது பலரை அதிருப்திப் படுத்தியது. அடொப்பின் flash player செயற்பட முடியாமல் இருப்பதை பல ஊடகங்கள் ஐ-பாட்டின் ஒரு பலவீனமாகவே கருதின. இதற்குப் பதிலளித்த ஆப்பிள் அடொப்பின் flash player ஒரு காலாவதியான செயற்படு மென் பொருள் என்று தாக்கியது. இதில் Facebook மட்டும் தம்மை ஆப்பிள் வாங்காது என்று மறுத்துள்ளது.
ஆப்பிள் தொடர்ந்து கவர்ச்சிகரமான கருவிகளை சந்தைப்படுத்தி அசத்துவது அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
Apple's huge cash reserve will definitely enable it to buy any of it rivals. Apple is the biggest company in US
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் ...அந்நியன்
ஆப்பிளை மனுஷன் துன்னா என்னா,கொரங்கு துன்னா என்னா?நம்பளுக்கு மூஞ்சிப் பொத்தாம் (Facebook) இரிந்தாப் போதும்!
Post a Comment