Monday, 25 October 2010

தகவல் "கொள்ளை" அடித்ததை ஒப்புக் கொண்டது கூகிள்


கூகிள் நிறுவனம் பிரித்தானிய மக்களின் வலைய முகவரிகளையும் இ-மெயில்களையும் கடவுச் சொற்களையும் அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்தமையை ஒப்புக் கொண்டுள்ளது. கார்க்ளில் பொருத்தப் பட்டுள்ள ஒளிப்பதிவுக் கருவிகளுடன் பிரித்தானியாவில் உள்ள சந்து பொந்துக்களில் எல்லாம் திரிந்து தெருப்படங்களைப் பதிவு செய்து அவற்றைத தமது வலையத்தளத்தில் வெளியிட்டுள்ளது கூகிள். இந்த காரிகளில் இன்னும் ஒரு உணரி(அண்டென்னா)யும் பொருத்தப் பட்டிருக்கும். அது வீடுகளில் உள்ள கணனிகளில் இருந்து தகவல்களையும் பெற்றுக் கொண்டது. இந்தக் கார்களை கூகிள் Streetview cars என்று சொல்கிறது.

கூகிளின் இந்தத் தகவல் திருட்டு பிரித்தானிய மக்களையும் அரசையும் பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே கூகிளின் செய்மதிப் படங்கள் திருடர்களுக்கு ஒரு வீட்டில் திருடிவிட்டுத் தப்பிச் செல்வதற்கான வழிகளைக் காட்டிக் கொடுகின்றன என்ற குற்றச் சாட்டு இருந்தது. ஹொலண்டில் ஒரு பெண் தனது வீட்டின் பின்புறத்தில் முழு நிர்வாணமாக இருந்து சூரியக் குளியல் செய்து கொண்டிருந்ததையும் கூகிள் வெளியிட்டு பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தது.

தான் பெற்ற தகவல்கள் தெரியாத்தனமாக நடந்த ஒன்று என்று கூகிள் சொல்கிறது. Streetview cars களில் உள்ள கணனிகளில் தெரியாத்தனமாக ஒரு பரீட்சார்த்த மென்பொருள் உள்ளடக்கப் பட்டிருந்ததால் இப்படி நடந்தது என்று கூகிள் சாட்டுச் சொல்கிறது. இது கலைஞரின் நாலு மணி நேர உண்ணாவிரத நாடகம் போன்றது.

கூகிள் தான் Streetview carsகள் மூலம் பெற்ற தகவல்களை விரைவில் அழித்து விடுவதாகவும் கூகிள் தெரிவிக்கிறது.

இப்படிப் பட்ட பரீட்சார்த்த மென்பொருள் உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன?
தனிய வர்த்தக நோக்கம் மட்டுமா அல்லது "பாதுகாப்பு" நோக்கங்களுமா?
இதன் பின்னால் பெரிய வல்லரசுச் சதிகள் உண்டா?

2 comments:

எஸ்.கே said...

கடவுளுக்கே வெளிச்சம்!

Anonymous said...

Shame on it!!!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...