
கண்களைத் தயார் செய்யும் முதலைகள்
வரும் தேர்தலுக்கு
தம் கண்களைத் தயார்
செய்கின்றன முதலைகள்
நரகத்து அடிமைகள்
சொர்க்கத்தில் அடிமையாக
இருப்பதை விட
நரகத்தில் அரசர்களாக
இருப்போம் என எண்ணினோம்
காட்டிக் கொடுத்த துரோகிகளாலும்
அடுத்து கெடுத்த அயலவராலும்
நரகத்தில் அடிமையானோம்.
இழப்புக்களும் இருப்புக்களும்
இழப்புக்கள் இழந்தவையைப்
பெருமைப்படுத்தும்.
இருப்புக்களை இழப்புக்களை எண்ணி
பாதுகாக்க வேண்டும்.
நாம் தொலையவில்லை
தனித்து விடப்பட்டோம்
தளர மாட்டோம்
அடுத்துக் கெடுக்கப்பட்டோம்
அயர மாட்டோம்
காட்டிக் கொடுக்கப் பட்டோம்
கலங்கமாட்டோம்
மழுங்கடிக்கப் பட்டோம்
மயங்க மாட்டோம்
நாம் தொலையவுமில்லை
துவளவுமில்லை
1 comment:
"NACH"!!!!!
Post a Comment