Sunday 3 October 2010

குறுங்கவிதைகள்: அறிவு வளர்க்கும் தொலைக்காட்சி நாடகங்கள்


குறுங்கவிதைகள்

We have a right
We have at least one right now
The right to remain silent

தேவையில்லாத வேலை
கடவுள் உலகைப் படைத்தார்
ஆனால் அது நன்றாக இல்லை
அவதாரங்களாக வந்தார்
தூதுர்களையும் அனுப்பினார்
ஆனால் சரிவரவில்லை
கடவுளே உங்களுக்கு
ஏன் தேவையில்லாத வேலை.

நம்பிக்கை
கடவுளை நான் நம்பவில்லை
கடவுளுக்கு என் மீது நம்பிக்கை வேண்டும்

அறிவு வளர்க்கும் தொலைக்காட்சி நாடகங்கள்
தமிழ்த் தொலைக் காட்சிகளின்
நாடகங்கள் என் அறிவை வளர்க்கின்றன
அவை ஒளிபரப்பப்படும் போதெல்லாம்
தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு
புத்தகங்கள் வாசிக்கிறேன்..

காதலியும் வினாத்தாள் போலே
தடவச் சுகமாய் இருப்பதலால்
தெரியாத கேள்விகள் கேட்பதால்
புரியாத புதிராய் இருப்பதால்
தோல்வியில் முடிவதால்
வினாத்தாளும் காதலிபோலே


தகவல்கள்
இனக் கொலைகள்
இயற்கை அனர்த்த அழிவுகள்
தகவல் தரப் பலர் உண்டு
தகவல்கள் அறியத் துடிப்போருமுண்டு
தடுத்து நிறுத்த யாருண்டு
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தது
தகவல்கள் மீதான நடவடிக்கைகள்
என்று உருவாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...