
மனமொத்த தம்பதிகளிடை ஒரு ஆறாம் உணர்வு இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானியர். முப்பது தம்பதியர்களிடை அவர்களின் மூளைகளின் இயக்கத்தையும் இதயத் துடிப்பையும் அடிப்படையாக வைத்து நடாத்தப்பட்ட ஆய்வுகளின்படி தம்பதிகள் மனோரீதியாக ஒத்திருக்கும் போது அவர்களின் மூளை ஒத்திசைவுடன் செயற்படுகிறது என்று முடிவு செய்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த ஒத்திசை நிலையில் அவர்களின் மூளை செயற்படும் நிலையில் மற்றவருக்கேற்ப மாற்றமடைகிறது. மற்றவர் உணர்வதைப் புரிந்து அதற்கேற்ப செயல்படுகிறது.
தம்பதிகள் ஒருவர் நினைப்பதை மற்றவர் அறியச் செய்கிறார்கள் என விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக நம்பியிருந்தனர். சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி திரிஷா ஸ்ரற்போ(ர்)ட் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு இப்போது அவர்களின் நம்பிக்கையை உறுதி செய்கிறது.
இந்த ஆறாம் உணர்வுடன் தொடர்புபட்டு மூளை செயற்படுவது தம்பதிகளுக்குமட்டுமல்ல நெருங்கிய நண்பர்கள் குடும்ப உறவினர்கள் ஆகியோரிடையும் உண்டு என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பலர் இப்படிப்பட்ட ஆறாம் உணர்வு தொடர்பு இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment