Friday, 10 September 2010
இந்திய எல்லை தாண்டிய பேரினவாதமும் சிங்கள எல்லை மீறிய பேரினவாதமும்
இலங்கைக்கு பயணம் செய்த இந்தியப் படைத் தளபதி ஏ. கே சிங் அவர்கள் இலங்கை அரசு சிறுபான்மையினர்களுக்கு இரங்கி ஏதாவது போட்டுக் கொடுக்க வேண்டும் என்றபாணியில் பேசினார். இது இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாதத்தின் உச்சக் கட்டம். இலங்கையில் தமிழர்கள் தனி நாடு அமைத்தாலோ அல்லது அதிக உரிமை பெற்றாலோ அது தனது நாட்டை இறுகிய பிடிக்குள் வைத்திருக்கும் இந்தியப் பேரினவாதத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அமையும் என்று இந்திய அரசு உறுதியாக நம்புகிறது. இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் தமிழர்கள் மட்டுமல்ல மற்ற மாநிலங்களும் அதிக அதிகாரம் கேட்கக்கூடும் என்று இந்தியப் பேரினவாதிகள் அஞ்சுகிறார்கள். இந்திய அரசியலமைப்பை வரைந்த அம்பேத்கார் அவர்கள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க விரும்பினார். ஆனால் உலக வரலாற்றில் மிக மோசமான பேரினவாதியான ஜவகர்லால் நேரு அதை எதிர்த்தார்.
இலங்கை பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட பின்னர் தமிழர்களை தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்க முற்பட்டார். இதற்காக ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் எஸ் தொண்டமானைச் சந்தித்து உரையாடினார் . தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு, தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே செய்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார்.
1983இற்குப் பின்னர் இந்தியா தான் தமிழர்களின் நண்பனாக நடித்து தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி அவர்களைச் சிங்களவர்களுடன் மோதவிட்டு இலங்கையை அமெரிக்கா சார்பாகச் செல்லவிடாமல் தடுக்க முற்பட்டது. 1987இல் இலங்கைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்ற பேச்சு வரும் போது இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவாலாக்கத்திலும் கூடுதலாக எதையும் இலங்கையில் செய்ய முடியாது என்று ராஜீவ் காந்தி(கான்) பகிரங்கமாகவே கூறினார்.
இவை யாவும் இந்தியப் பேரினவாதம் எல்லை தாண்டி வந்து இலங்கையிலும் பேரினவாத ஆட்சியே நடக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தது என்பதற்கு உள்ள ஆதாரங்கள் பலவற்றில் சில. அதற்காக இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒடுக்க சீனாவிற்கு சில விட்டுக் கொடுப்புகளை இந்திய செய்து கொண்டு வருகிறது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூட இதற்ககாகப் பலியிட்டனர். 1980களில் திருகோணமலைத் துறை முகத்தில் எண்ணெய் மீள் நிரப்பு வசதிகளை அமெரிக்கா செய்ய முற்பட்ட போது ஆத்திரம் கொண்டெழுந்த இந்திய அரசு அம்பாந்தோட்டையில் சீனா துறை முகம் அமைப்பதை அனுமதித்தது எப்படி? தமிழர்களுக்கு எதிராக சீனாவுடன் இந்தியா திரைமறைவில் கைகோத்துக் கொண்டதா? 1987இல் செய்யப்பட்ட ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்திய இலங்கை உறவு தமிழர்களை அடிமைப்படுத்துவதிலேயே முனைப்புக் காட்டியது.
எல்லைதாண்டிய இந்தியப் பேரினவாதம் சிங்களவர்களுக்கு தமிழர்கள் மீதான போரில் சாதகமான நிலையை ஏற்படுத்தி இப்போது தமிழர் நிலங்களில் தமிழர்களை அபகரிக்கும் சிங்களப் பேரினவாதத்திற்கு துணை நின்று தமிழர் நிலங்களில் தமிழர்களைச் சிறுபானமையினராக்கி அவர்களை நிரந்தர அடிமைகளாக்க முயல்கிறது. தமிழர்களின் தீரமிக்க எழுச்சியால் கதிகலங்கிப் போயிருந்த சிங்களப் பேரினவாதம் சிங்களப் பேரினவாதத்திற்ர்கு இந்தியப் பேரினவாதம் கைகொடுத்து உதவி வருகிறது. இந்திய எல்லை தாண்டிய பேரினவாதத்தின் உதவியுடன் இப்போது சிங்களப் பேரினவாதம் எல்லை மீறி நிற்கிறது. இப்போதும் இத்தனை அழிவுகளுக்குத் தமிழர்களை உள்ளாக்கிய பின்னும் இந்தியப் பேரினவாதம் தனது சில்லறைக் கைக்கூலிகள் மூலம் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை இன்று போதிக்க முயல்கிறது. தமிழர்கள் தங்களது பாரம்பரிய நண்பனாகக் கருதி வந்த இந்தியாவை இனியும் நம்பாமல் மாற்றி யோசிக்க வேண்டிய காலம் இது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment