Wednesday, 8 September 2010
கால்பந்து வீரர் வெயின் ரூனியைப் பந்தாடும் அழகி
கால்பந்தாட்ட வீரர்களின் பிரபல்யமும் அவர்கள் உழைக்கும் பணமும் அவர்களுக்கு பிரச்சனையையும் கொண்டு வரும். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் விடும் தவறுகள் தில்லு முல்லுக்களை அம்பலப் படுத்தினால் பத்திரிகைகள் நிறைய சம்பாதிக்கலாம். இங்கிலாந்து கால்பாந்தாட்ட வீரர் வெயின் ரூனி (Wayne Rooney) தென் ஆபிரிக்க உலகக் கிண்ணத்திற்கான போட்டி ஆரம்பிக்கப் பட்டபோது மிகப் பிரபலமாக இருந்தார். அவரிடம் இருந்து அவரது இரசிகர்கள் நிறைய எதிர் பார்த்தனர். ஆனால் அவரது ஆட்டம் சோபிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இவர் மீது வெறுப்பு சற்று வளரத் தொடங்கியது. இக்கட்டத்தில் இவர்மீது சேறு பூசும் செய்திகளை வெளியிடுவதால் நிறைய சம்பாதிக்கலாம் என்றுணர்ந்த ஊடகங்கள் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறத் தொடங்கின. அவர்கள் முயற்ச்சி வீண் போகவில்லை. வெயின் ரூனியின் மனைவி கற்ப முற்றிருக்கும் போது ஒரு விபசாரியுடன் அவர் வைத்திருந்த தொடர்பு இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. அவர் ஜெனிபர் தொம்சன் என்ற அழகியுடன் ஒரு இரவிற்கு £1200களுக்கு ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் இரவைக் கழித்ததை டெய்லி மெயில் பத்திரிகை தொடர்ந்து எழுதி வருகின்றது. இந்த விவகாரம் ரூனியின் திருமணம் விவாகரத்தில் முடிக்கலாம் என்று கருதப் படுகிறது. நேற்று நடந்த சுவிஸ்சலாந்துக்கு எதிரான கால்பந்தாட்டப் போட்டியில் விளையாட ரூனி தெரிவு செய்யப்படாமல் போகலாம் என்று கூட எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி பயிற்ச்சியாளர் ரூனியுடன் கதைத்து அவர் மன நிலையை உணர்ந்து கொண்டு அணியில் சேர்ந்தார். ரூனி மிகச் சிறப்பாக விளயாடி இங்கிலாந்து அணியின் 3-1 இலக்குகளுடனான வெற்றிக்கு வழி வகுத்தார். ரூனியின் நெருங்கிய உறவுப் பெண் ரூனியின் மனைவியிடம் ரூனியின் விவகாரம் பற்றிக் கதைக்கும் போது அவனை ஒரு மூட்டையில் கட்டி குப்பைத் தொட்டியில் வீசு என்று கூறினாராம்.
டெய்லி மெயில் பத்திரிகை இப்போது வெயின் ரூனியிலும் பார்க்க ஜெனிபர் தொம்சனைப் பற்றிய் செய்திகளை அவரது கவர்ச்சிகரமான புகைப் படங்களுடன் வெளியிடுகிறது.
ஜெனிபர் தொம்சனின் தந்தை காட்டர் நாட்டில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரி. இதனால் ஜெனிபர் தொம்சனும் தனது ஆரம்ப வாழ்க்கையை காட்டார் நாட்டிலேயே கழிக்க வேண்டி இருந்தது. பின்னர் அவர் கல்விக்காக இங்கிலாந்து வந்த போது புதுச் சூழ் நிலைக்கு இசைவாதலில் அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனால் ஜெனிபரது வாழ்க்கை திசை மாறியது. ஜெனிபருக்கு கால்பந்தாட்ட வீரர்கள் மேல் ஒரு தனிப் பிரியமாம். ஜெனிபர் தனது 16வது வயதிலேயே தனது தொழிலை ஆரம்பித்து விட்டாரம். Juicy Jenny என்று தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வார். இவரது தோழிகளுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டால் இவர் அவர்களைப் பழிவாங்கும் விதமே தனி! தன்னுடன் மோதும் தோழிகளின் காதலர்களை தனது படுக்கைக்கு கொண்டு சென்று விட்டு. பின்னர் அவர்களிடம் தனது அனுபவத்தைச் சொல்லி அவர்களைப் பழிவாங்குவாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment