Friday, 30 July 2010

பிரான்சில் ஒரு கங்கா தேவி

கங்கா தேவி பாண்டவர்களின் முதாதையாரான சந்தனுவை தான் என்ன செய்தாலும் தலையிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் திருமணம் செய்து கொண்டாராம். அவர்மீது மையல் கொண்ட சந்தனு கங்காதேவியின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாராம். கங்காதேவி தனக்குப் பிறந்த பிள்ளைகளை பிறந்தவுடன் கொண்டுபோய் கங்கை ஆற்றில் எறிந்து கொன்று விட்டுச் சிரித்துக் கொண்டே வீடுதிரும்புவாராம். கேட்டால் நிபந்தனையை எடுத்துச் சொல்லி தான் என்ன செய்தாலும் கேட்க வேண்டாம் என்று சொல்வாராம். இப்படி ஏழு குழந்தகளை கொன்ற கங்கா தேவியார் எட்டாவது குழந்தையையும் கொல்ல எடுத்துச் சென்ற போது சந்தனு தடுத்து நிறுத்தினார். ஒப்பந்தம் மீறப்பட்டதால் கங்காதேவி சந்தனுவை விட்டுச் சென்று விட்டார். எட்டாவது குழந்தைதான் பின்னர் பீஷ்மாச்சாரியார் ஆனார். ஹம்சனும் ஏழு மருமக்களைப் பிறந்தவுடன் கொன்றானாம் . எட்டாவது குழந்தை கண்ணனாக வந்தது.

பிரான்சிலும் கங்கா தேவியார் போல் ஒரு பெண்மணி டொமினிக் கொற்றெஸ் என்பவர் 1989இற்கும் 2005இற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தனக்குப் பிறந்த குழந்தைகளை பிறந்தவுடன் கொன்று விட்டாராம். இவரது வீட்டை வாங்கியவர் அங்கிருந்த சிறு குளத்தை துப்பரவு செய்தபோது அதில் இரு பிளாஸ்டிக் பைகளில் இரு இறந்த சிசுக்களக் கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். காவல் துறையினர் அவர்களது புது வீட்டில் சோதனையிட்டபோது மேலும் ஆறு சிசுக்களின் உடல்களைக் கண்டுபிடித்தனர். தனது முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட வேதனையால்தான் தான் இப்படிச் செய்ததாக டொமினிக் கூறியுள்ளார். முதல் பிரசவத்தில் மருத்துவ மனையில் ஏற்பட்ட வேதனையால் பிறகு தனக்கு பிரசவத்திற்கு மருத்துவ மனைக்குப் போக விருப்பம் இல்லையாம்.

டொமினிக்கின் கணவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார். கணவருக்கு இது எதுவும் தெரியாதாம். மனைவி மிகப் பருமனான உடல் கொண்டவராதலால் (133KG தாஜ்மஹால்) அவர் கருத்தரித்திருப்பதை தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கணவன் கூறியுள்ளார். (அந்த மூன்று நாட்கள் என்ன நடந்திருக்குக்கும்?) இத்தனைக்கும் ஒரு நல்ல பெண்மணியாக இருந்ததாக அயலவர்கள் கூறுகிறார்கள். அது மட்டுமா அவர் ஒரு மருத்துவத் தாதி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...