Wednesday 23 June 2010
செம்மொழி மாநாடு பற்றி இலண்டன் வானொலியில் சொல்லப் பட்ட கருத்துக்கள்.
தமிழ்நாடு கோவையில் நடந்து கொண்டிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பற்றி தனது நேயர்களை கருத்துத் தெரிவிக்கும்படி இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்று புதன்கிழமை 23-06-2010 இரவு கேட்டுக் கொண்டது. அங்கு நேயர்கள் கூறிய கருத்துக்களின் சாராம்சம்:
1. முதல் வந்த நேயர் இது செம்மறி மாநாடு என்றார்- தமிழர்கள் உயிரோடு புதைக்கப் பட்டபோது பேசாமல் இருந்தவர்கள் இறந்த மக்களுக்கு இரங்கல் கூடத தெரிவிக்காமல் மாநாடு நடத்துவதைக் கண்டித்தார்.
2. அடுத்து வந்தவர் தமிழர்கள் கொல்லப் பட்டபோது பேசாமல் இருந்தது தமிழக அரசு. அது ஒரு கையாலாகாத அரசு. அப்படிப்படவர்களுக்கு செம்மொழி மாநாடு நடத்த அருகதை இல்லை என்றார்.
3. தொடர்ந்து வந்த நேயர் தமிழ் செம்மொழியாக்கப் பட்டமைக்கான மாநாடு அதில் இறந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கதது கண்டனத்துக்குரியது என்றார்
4. அதற்கடுத்து வந்த நேயர் இந்த மாநாடு தமிழர்களை முன்னிறுத்தாமல் திராவிடர்களை முன்னிறுத்தி நடத்தப் படுகிறது. சிங்களவரிலும் பார்க்க இந்தியா கொடுமையானது என்றும் கூறினார்.
5. பின்னர் வந்த நேயர் ரோம் எரியும் போது நீரோ மன்னர் பிடில் வாசித்ததிற்கு ஒப்பானது இந்தச் செம்மொழி மாநாடு என்று சொன்னார்.
6. அடுத்து வந்த நேயர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஒரு தமிழாராச்சி மாநாடு கூட நடத்தவில்லை . தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவும் தன்னைப் பற்றி மற்றவர்கள் புகழ்வதைப் பார்த்து மகிழவும், அதிமுகவின் கோட்டையான கோவையைத் தாக்கவும் இந்த மாநாடு என்றார்.
அவரிடம் இலண்டனில் பல நிகழ்வுகள் நடக்கின்றன என்றார் நிகழ்ச்சியை நடாத்திய அறிவிப்பாளர். அத்துடன் சிவத்தம்பி விழாவில் கலந்து கொள்கிறாரே என்றும் அறிவிப்பாளர் கேள்வி எழுப்பினார்.
முதலில் போக மறுத்த சிவத்தம்பியை கருணாநிதி கனிமொழி ஆகியோர்பல முயற்ச்சிகளின் பின் மனம் மாற்றினார்கள் என்றார் அந்த நேயர்.
7. இன்னொரு நேயர் இலண்டனில் இருந்து பற்றிமாஹரன் கலந்து கொண்டமைக்காக கவலைப்பட்டார்.
8 முதலாவதாக கலந்து கொண்ட நேயர் மீண்டும் வந்து கலைஞருக்கு இந்த மாநாட்டில் பட்டங்கள் வழங்கப்படும் என்றார்.
9. ஒரு நேயர் மீண்டும் வந்து செம்மொழி மாநாட்டைத் தாக்கிப் பேச முற்பட்டபோது அறிவிப்பாளருக்குப் பொறுக்க முடியவில்லை. இந்த வானொலியும் அதன் அறிவிப்பாளரும் இந்திய இலங்கை அரசுகளின் கைக்கூலி என்று சிலர் குற்றம் சுமத்துவது உண்டு. வந்த சகல நேயர்களும் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததை அவரால் பொறுக்க முடியவில்லை. ஐரோப்பிய தமிழர்களின் பலவீனம் அவர்களின் பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை என்பதுதான். அதுவும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை. அறிவிப்பாளர் வந்த நேயர்களைத் தாக்குவதற்கு அதை ஆயுதமாக எடுத்துக் கொண்டு திருப்பித் திருப்பி அதையே கூறிக் கொண்டார். இதனால் கருத்துக் களம் திசை மாறியது. பின்னர் அதிக நேரம் அதில் செலவிடப் பட்டது.
10. அடுத்து வந்த நேயர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கிண்டலாகச் சொன்னார்.
11. இன்னொரு நேயர் வந்து சிவ சங்கர மேனன் தமிழினத்தை வேரோடு அழிப்பேன் என்று கூறியதாகச் சொன்னார். அதை அந்த அறிவிப்பாளரும் ஆமோதித்தார். ( நான் அறிந்த மட்டில தமிழீழ விடுதலைப் புலிகளை வேரோடு அறுப்பதாகத்தான் குறிப்பிடப்பட்டது.) கலைஞர் ஈழத் தமிழ் மக்களைப் பற்றி கவலைப் படுவதில்லை என்றும் அந்த நேயர் சொன்னார்.
துரோகக் குழுவைச் சேர்ந்தவராகக கருதப்படும் அந்த அறிவிப்பாளர் இப்போது வேறு விதமாகக் கதையைத் திருப்பினார். இலங்கையில் இந்தியத் திரைப்பட விழா நடந்த போது டெல்லிவரை சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஏன் இதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, பயந்து விட்டார்களா என்று மறைமுகமாக சீமானைத் தாக்கினார். அத்துடன் தஞ்சையில் ஜெயலலிதா நடாத்திய மாநாட்டில் ஜெயலலிதாவின் பின்னால் நின்றவர் நெடுமாறன் என்றார். அதற்குச் சென்ற ஈழத் தமிழறிஞர்கள் சிவத்தம்பி உட்பட மாநாட்டில் பங்கு பற்றாமல் இந்திய அரசால் திருப்பி அனுப்பப் பட்டதையும் அந்த அறிவிப்பாளர் குறிப்பிட்டார்.
மொத்தத்தில் எந்த ஒரு நேயரும் செம்மொழி மாநாட்டை ஆதரிக்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
8 comments:
இது நெஞ்சில் நஞ்சை வைத்துக் கொண்டு வாயில் அமுதூற்றும் நடா மோகன் என்ற புளொட்காறனுடைய வானொலிதானே?
உங்க வீட்டில தமிழ் பேசுவாங்களா???
அடேய் படுவா...நீங்கள்லாம் லணடன்ல முழுப்பயலும் கள்ளவேசம் போட்டு அகதிகளா குடியேறி சுகவாசாமா வாழ்ந்துக்கிட்டு அப்பப்போ ஈழம் அது இதுன்னு சாப்பாட்டு ஜீரணிக்கறதுக்காக பேசிக்கிட்டு திரியறவனுங்கதானே? உங்களுக்கு நாடு வேணும்னா எல்லாத்தயும் போட்டுட்டு இலங்கைக்குப்போயி கேளு, அத விட்டுபுட்டு, தமிழ்நாட்டப் பத்தியோ, நாங்க தேர்ந்தெடுத்து வெச்சிருக்க முதல்வரப் பத்தியோ சொல்வதற்கு உங்களுக்கெல்லாம் என்ன இருக்கிறது?
இலண்டன் வாழ் தமிழனைத் தூற்றும் நீ என்ன பிரியாணிக்கு வாக்களித்த புல்லுருவியா இல்லை தமிழர்களை பிரித்துவிடத் துடிக்கும் பிராமணியா?
ஒரு கிலோ அரிசிக்கும் ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் ஓட்டுப்போடும் ஈனப்பிர்ப்புகளடா நீங்கள். உங்களுக்கு என்று சொந்த அறிவும் எண்ணமும் எப்போதடா வரப்போகுது????????????
இரண்டி கிலோ அரிசி தந்தால் ஜெயலலிதாவுக்கும், மூன்று கிலோ கிடைத்தால் ஜெயலலிதாவின் அம்மாவுக்கும் போடுவீர்கள். அதையே சற்று அதிகமாக ஐந்து கிலோ கொடுத்தால் உன் அம்மாவையே கொடுக்கத் தயங்க மாட்டீர்கள். கிணற்று தவலையாய் இருக்காமல் உலக நாடுகளை கொஞ்சம் பாருங்கள். உலக ஒழுங்குகள் எப்படி மாறிவருகின்றன என்பதை கவனியுங்கள். அப்போதாவது கொஞ்சம் அறிவு வரட்டும்.
அறிவு எங்கே இருந்து வரப்போகுது? பக்கத்து ஊரையே சென்று பார்க்க முடியாத அன்னக் காவடிகளாய் நாங்கள் இருக்கிறோம். அடுத்த வேலை சாப்பட்டுக்கு வழியை காணோம். உலக நாடுகளுக்கு எப்படி போவது... அடுத்த தேர்தல் வந்தால் ஒரு பிரியாணியாவது கிடைக்கும் என காத்து நிக்கும் அப்பாவிகளையா நாங்கள். - தமிழ்நாட்டு தமிழன்
அறிவு எங்கே இருந்து வரப்போகுது? பக்கத்து ஊரையே சென்று பார்க்க முடியாத அன்னக் காவடிகளாய் நாங்கள் இருக்கிறோம். அடுத்த வேலை சாப்பட்டுக்கு வழியை காணோம். உலக நாடுகளுக்கு எப்படி போவது... அடுத்த தேர்தல் வந்தால் ஒரு பிரியாணியாவது கிடைக்கும் என காத்து நிக்கும் அப்பாவிகளையா நாங்கள். - தமிழ்நாட்டு தமிழன்
Post a Comment