Friday, 18 June 2010
எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்
அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட திருடன் அங்கு நள்ளிரவில் திருடச் சென்றான். தான் கொண்டு சென்ற பைக்குள் முதற் பொருளை எடுத்து வைக்க முயன்றபோது "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்று ஒரு குரல் கேட்டது. முதலில் அதிர்ச்சியடைந்த திருடன் பின்னர் தன் மனப் பிரமையாக இருக்கலாம் என்று எண்ணி தனது வேலையைத் தொடர்ந்தான். மீண்டும் "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்று ஒரு குரல் கேட்டது. இப்போது திருடன் சற்று யோசித்துவிட்டு இருளில் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான். மீண்டும் அதே குரல். "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" அவன் காதில் விழுந்தது. இப்போது திருடன் மின்விளக்கை தட்டிவிட்டான். அந்தக் குரல் வந்த இடத்தில் ஒரு கிளி இருந்ததைப் பார்த்து ஆறுதல் அடைந்தான். அந்தக் கிளியை அன்போடு தடவி உன் பெயர் என்ன என்று வினவினான். கிளி அங்கயற்கண்ணி என்றது. ஒரு கிளிக்கு அங்கயற்கண்ணி என்று பெயரா என்று கிளியிடம் ஆச்சரியத்துடன் திருடன் வினவினான். எனக்கு அங்கயற்கண்ணி என்று பெயர் என்று ஆச்சரியப் படாதே. அங்கு பார். உன் குரல் வளையைக் கடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நாய்க்குப் பெயர் சிவபெருமான் என்றது கிளி.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
4 comments:
அருமையான நகைச்சுவை...
சில வரிகளே கொண்ட இச்சிருகதை பெரிய அர்த்தத்தோடு...கெஸ்பண்ண முடியாத அளவிற்க்கு...அருமை..அருமை
சுவையான கதை வேல்தர்மா பாராட்டுக்கள்
அருமையான கதை
Post a Comment