
பிரித்தானியத் தேர்தலில் தொங்கு பாராளமன்றம் என்பது உறுதியாக்கப் பட்ட நிலையில் பழமைவாதக் கட்சி(Conservative Party) ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை தாராணமை வாதக் கட்சித் தலைவர் Nick Clegg சற்று முன் வெளியிட்ட அறிக்கை உருவாக்கியுள்ளது.
தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பிலேயே தொங்கு பாராளமன்றம் என்பது உறுதியாக கருதப் பட்டது. தொழிற்கட்சியின் தோல்வி எதிர்பார்த்தது போல் படு மோசமாக அமையவில்லை. அது மூன்றாவதாக வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தொழிற் கட்சி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்று காலை பதினொரு மணிவரை தொழிற்கட்சிப் பிரதமர் பதவி விலகவில்லை. பதினொரு மணியளவில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தாராண்மை வாதக் கட்சி ஏற்கனவே அறிவித்தது போல் தாம் கட்சி பேதம் பாராமல் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு முதலாம் இடத்தில் இருக்கும் கட்சிக்கே அரசு அமைக்க ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.
பழமை வாதக் கட்சிக்கு தாராண்மை வாதக் கட்சி வழங்கவிருக்கும் ஆதரவு பிரித்தானியத் தேர்தல் முறையை மாற்றி அமைப்பதை நிபந்தனையாகக் கொண்டிருக்கும். பிரித்தானியாவில் இத்தாலியில் உள்ளது போல் விகிதாசாரத் தேர்தல் முறையை கொண்டுவரவேண்டும் என்று தாராண்மைவாதக் கட்சி எதிர்பார்க்கிறது. இதற்கு சம்பதிக்கும் பட்சத்தில் பழமைவாதக் கட்சி ஆட்சி அமைக்கலாம்.
தேர்தல் முடிவுகள்: 11:30 காலை
பழமை வாதக் கட்சி: 291
தொழிற் கட்சி: 251
தாராண்மை வாதக் கட்சி: 52
மற்றயவை: 27
முடிவுகள் அறியப்படாதவை: 29
இறுதியாக பழமைவாதக் கட்சி 306 ஆசனங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது அறுதிப் பெரும்பான்மைக்கு 20ஆசனங்கள் குறைவானதாகும்.
விகிதாசாரத் தேர்தல் முறை தொடர்ந்து தொங்கு பாராளமன்றத்தையே உருவாக்கும் என்று இந்த முறையை எதிர்ப்போர் வாதிடுகின்றனர்.
1 comment:
Will there be a change in UK's foreign policy re Sri lanka
Post a Comment