
உங்கள் கணனியின் இணையத்தில் நீங்கள் சில தொலைக்காட்சி சேவைகளைக் காணலாம். கூகிள் கொஞசம் மாத்தி யோசிக்கிறது. தொலைக்காட்சிக்குள் இணையத்தைக் கொண்டு வருகிறது.
உங்கள் தொலைக்காட்சிக்குள் முழு உலக இணைய வலையமைப்பையுமே கூகிள் கொண்டு வரப்போகிறது.
தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டு இணையங்களில் உலாவுபவர்களுக்கு இது கொண்டாட்டம்தான்.
இந்த GoogleTV யை பல்லாயிரக்கணக்கானோருக்கு கூகிள் நிறுவனம் பரீட்சார்தமாக ஒளிபரப்புச் செய்தது. இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் இந்த GoogleTVவிற்பனைக்கு வரவிருக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப் படவில்லை. கூகிளின் Androidமென்பொருள் முலமாக இயக்கவிருக்கும் இந்த GoogleTVயானது a remote controllerdevice with a full keyboard ஆகியவற்றைக் கொண்டது. இது கூகிளின் குரோம் உலாவியையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனமும் யாகூ நிறுவனமும் இந்தக் கூட்டு முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தன. பேஸ்புக், யூரியூப் ஆகிய சமூக வலையமைப்புகள் இலகுவாக கூகிளின் தொலைக்காட்சியில் பெறக்கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இணையங்களில் உலாவுவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதை அடுத்தே இந்த முயற்ச்சியில் கூகிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கூகிள் நிறுவனம் இன்ரேல் நிறுவனத்துடனும் சோனி நிறுவனத்துடனும் இணைந்து இப்புதிய தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளது. இப்புதிய தொலைக்காட்சியை வாங்குவதன் மூலமாகவோ அல்லது உங்களிடம் ஏற்கனவே இருக்கும் தொலைகாட்சிக்கு ஒரு பிரத்தியேகப் பெட்டியை வாங்கி இணைப்பதன் மூலமாகவோ நீங்கள் கூகிள்ரீவீயைப் பார்க்கலாம்.
இந்த தொலைக்காட்சிக்கான தாயாரிப்பில் பங்கு கொள்வதன் மூலம் இன்ரெல் நிறுவனம் தனது வியாபாரத்திற்கு கணனித்துறையில் மட்டும் தங்கியிருக்காமல் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் தனது வியாபாரத்தை விரிவாக்கியுள்ளது.
1 comment:
பகிர்விற்கு நன்றி தோழா
Post a Comment