Friday, 19 March 2010

செருப்பாய் இருப்பாய் தமிழா என்கிறது இந்தியா.



தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கை இராணுவம் நடமாட அஞ்சி இருந்தது அன்று. இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ்ப்போராளிக் குழுக்கள் தாக்குதல் நடத்தி பாரிய அழிவுகளை விளைவிக்கலாம் என்று இலங்கை அரசு அன்று அஞ்சி இருந்தது. தமிழர்கள் கைகளில் ஆயுதம் இருந்தது அன்று.

இன்று தமிழனுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறதா? என்ற கேள்விக்குறி மட்டும்தான் தமிழனின் சொத்து.

ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தப் படி தமிழ்ப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படக்க வேண்டும். போராளிக் குழுக்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. பிரச்சனை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில். அதைத்தீர்க்க ஒப்பந்தம் செய்தவர்கள் அபோதைய இலங்கை குடியரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்தனேயும் அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும். இதில் தமிழர்களின் பங்கு என்ன? தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப் பட்டது. அதன் படி இந்தியா பல வாக்குறுதிகளை தமிழர்களுக்கு வழங்கியது,

தமிழர்களுக்கும் இந்தியா கொடுத்த வாக்குறுதிகள்.
  • தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காணும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இலங்க அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்ப்டும்.
  • இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு தமிழர்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப் படும்.
இவை இந்தியா கொடுத்த வாக்குறுதிகள். இவை எழுத்தில் கொடுக்கப்படாத கனவான் ஒப்பந்தம். ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தப் படி விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா 1987இல் ஆரம்பித்தது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து அன்றிலிருந்து அரும் பாடுபட்டு 2009இல் தமிழ்த் தேசியத்தின் ஆயுத் பலத்தை மழுங்கடித்தது.

இப்போது 1980களில் செய்தது போல் தமிழர்களை பல கூறுகளாகப் பிரிப்பதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

இந்தியக் கைக்கூலிகளின் பூச்சாண்டி
இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறுகதியில்லை என்று இந்தியக் கைக்கூலிகள் போதித்து வருகின்றனர். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். தமிழர்கள் மேற்குலகை சார்ந்து விடுவார்களோ என்றபயம் இந்தியாவிற்கு இருப்பது இயற்கை. அதனால் இந்தியா தனது கைக்கூலிகள் மூலம் இந்தியாவை மிஞ்சி எந்த மேற்குலகமும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வராது என்று போதிக்கின்றனர். ஒரு இந்தியக் கைக்கூலி மேற்குலகம் இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்திற்கு இந்தியாவையே நம்பி இருக்கிறது என்று பொய் கூறுகின்றனர். இந்தியப் படை பலத்திலும் பார்க சீனப் படைபலம் மூன்று மடங்கானது. சகல ஆசிய நாடுகளின் பாதுகாப்புச் செலவீனங்களிலும் பார்க்க அமெரிக்க பாதுகாப்புச் செலவீனம் பலமடங்கானது. இப்படிப்பட்ட இந்தியாவின் தயவு யாருக்குத் தேவை? இந்திய சனத்தொகையை எப்படிச் சுரண்டுவது? இந்தியக் இணையக் கூலிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதுதான் மேற்குலகின் திட்டம். சீனாவின் இருவகையில் இந்தியாவிற்கு ஆப்பு வைக்கிறது. ஒன்று இந்தியாவைச் சுற்றி முத்துமாலைத் திட்டம் என்றபெயரில் இந்தியாவிற்கு போடும் சுருக்குக் கயிறு. மற்றது உள்ளூரில் வளரும் மாவேயிஸ்ட் வாதம். இந்தியாவின் வருங்காலம் அதோகதி!!!

இந்தியா தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறது?
சென்ற ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இந்திய விற்பன்னர்கள் தமிழர்கள்மீது அநுதாபம் காட்டுவது போல் தமிழர்களைப் பற்றி கேவலமாக எழுதி வந்தனர். இனித் தமிழர்கள் பிச்சாண்டிகள் என்பது போலும் எழுதினர். It is Hobson’s Choice for Tamils என்று ஒரு கட்டுரையை கேணல் ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார். ஹொப்சன் என்னும் குதிரை வாடகைக்கு விடும் ஆங்கிலேயர் தனது ஒரு குதிரையை மட்டும் எல்லோரும் வாடகைக்கு கேட்பதால் தான் கொடுக்கும் குதிரையை மட்டுமே வாடகைக்கு பெறவேண்டும் அல்லது ஒரு குதிரையும் கிடைக்காது என்று நிபந்தனையை விதித்தாராம். அதாவது தமிழர்கள் முன் உள்ள ஒரே தெரிவு சிங்களவர்கள் கொடுப்பதைப் பெறுங்கள். அந்தளவு பிச்சாண்டிகள் தமிழர்கள். அல்லது உங்களுக்கு எதுவுமில்லை என்று ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார்.

இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிள்ளையானைச் சந்தித்த பின் பிள்ளையான் ஒஸ்லோத் தீர்மானத்தை நிராகரித்தார். 13வது திருத்தம் தான் வழி என்கிறார்.
பேரின வாத இந்தியாவின் தற்போதை ஒரே எண்ணம் சிங்களப் பேரினத்தின் செருப்பாய் தமிழன் இருக்க வேண்டும் என்பதுதான்.

தாத்தா சுதுமலையில் கொடியேற்றினார்

பேரன் கீரிமலையில் கப்பலோட்டினார்
தகப்பன் திருமலையில் கோபுரம் கட்டினார்
மகன் பாரெங்கும் அலைகின்றான்.

செந்நீர் பாய்ச்சி
உயிர்பல உரமிட்டு
துயர்மிக சுமந்து
இடர்பல பட்டு
நாம் வளர்த்த
விடுதலைப் பயிர் பற்றி
கண்ணீர் விட்டு
சுதந்திரப் போர்ப் பயிர்
வளரத்தோர்க்கு
புரியாமல் போனதென்ன

நம்மை அடுத்துக் கெடுத்த
இந்தியாவே எம் முதல் எதிரி
என்றான பின்பே
ஆரியக் கைக்கூலிகள்
இந்தியாவை விட்டால்
எமக்கு வேறு கதியில்லை
என்று புலம்பித் திரிகின்றன.

2 comments:

Anonymous said...

நெருப்பாய் எழுவான் தமிழன். அழிப்பான் ஆரியப் பேய்களை...

Unknown said...

SATHIYAMANA UNMAI,

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...