இலங்கைத் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்களுக்கும் இடையில் நல்ல உறவு உள்ளது. அவர்களுக்கிடையில் ஏதோ பரிமாறப் பட்டதாகவும் வதந்திகள் பரவியிருந்தன. இலங்கையில் போர் முனையில் அப்பாவித் தமிழர்கள் உணவின்றி மருத்துவ வசதி இன்றித் தவித்த போது ஐக்கிய நாடுகள் சபை கைகட்டி வாய்பொத்து நின்றது. இலங்கைக்கு சென்று போர் நிறுத்தம் பற்றி பேச்சு வார்த்தை நடத்தும் படி பான்கீமூனை வற்புறுத்தியபோது தட்டிக் கழித்து காலத்தை வீணாடித்தார் பான் கீ மூன். பின்னர்வில்லங்கமான வில்லனும் இலங்கை அரசின் படைத்துறை ஆலோகரான் சதீஷ் நம்பியாரின் சகோதரருமான விஜய் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பினார். விஜய் இலங்கை சென்று ஐநாவிற்கு அறிக்கை சமர்பிக்காமல் காலத்தை வீணடித்தார். இலங்கை தனது இனக் கொலைப் போரை தங்கு தடையின்றி முடித்தது.
போரில் சதி செய்த ஐநா இப்போது குடியரசுத் தலைவர் தேர்தலிலும் சதி செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அரசின் தேர்தல் ஆணையகம் தேர்தலைக் கண்காணிக்க ஐநாவின் கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்கும்படி கேட்டிருந்தது. இதற்கு இதுவரை பதிலளிக்காமல் கடத்திவந்த ஐநா அதிகாரிகள் இப்போது தாம் கண்காணிப்பாளர்களை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதற்கு அவர்கள் காட்டும் நொண்டிச் சாட்டு:
- we don't want to legitimize an election we have our doubts about. He added that the excuse the UN would give was that the request had come from Sri Lanka's electoral body, and not the Rajapaksa administration. At most, he said, the UN might send some informal representative of the Secretary General.
Inner City Press மேற்படி தகவலை வழங்கியது. Daily Mirror வேறு விதமாகத் தெரிவிக்கிறது:
- "In light of the limited lead time available" and because U.N. election observation requires a mandate from the General Assembly or Security Council, "the U.N. informed the commissioner and the government of Sri Lanka that it could not provide observers," Nesirky said.
ஐநா தரப்பில் ஏன் இந்த முரண்பாடு?
இலங்கையில் அரசியல் இராணுவமயமாக்கப் பட்ட நிலையிலும் மோசமான மனித உரிமைமீறல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும் ஒரு நியாயமான தேர்தல் நடக்கும் என்பது பலத்த சந்தேகம். ஐரோப்பிய ஒன்றியமும் நியாயமான தேர்தல் நடத்தாவிடில் தனது ஜீஎஸ்பி+ வர்த்தகச் சலுகை கிடைக்காது என்று இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. இப்போது இலங்கை இருக்கும் நிலையில் சிறந்த ஒரு தேர்தல் கண்காணிப்புச் சேவை இலங்கையில் தேவை. இலங்கையில் ஒரு ஒழுங்கான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது ஐநாவின் கடமை. இதை உணர மறுத்து தேர்தல் முறைகேடாக நடக்கட்டும் என்று ஐநா விரும்புகிறதா? ராஜபக்ச முறைகேடாக தேர்தலை நடாத்தி வெற்றி பெறட்டும் என்று அவரது நண்பர் பான் கீ மூன் விரும்புகிறாரா?
1 comment:
ஐ. நா கண்கணிப்பாளர்கள் சமூகமளிப்பதால் மட்டும் நேர்மையான தேர்தல் இலங்கையில் நடைபெற்று விடுமா என்ன?கிழக்கில் மகிந்தர் வெற்றி பெற்று விட்டார் என்று கருணா இரு வாரங்களுக்கு முன்பே சொல்லி விட்டார்.இந்த லட்சணத்தில் தேர்தல் கண்காணிப்பால் என்ன இலாபம்?
Post a Comment