
தமிழத் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு தெரிவித்தமை. பல தமிழ் வாக்குகளை மஹிந்த ராஜபக்சவிற்கி எதிராக திருப்பவுள்ளது. தமிழர்கள் மீது உள்ள அரச கெடுபிடிகளை நீக்குவதன் மூலம் அவர்கள் வாக்குகளைப் பெறமுயன்ற மஹிந்தவிற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முடிவு பலத்த அடியாக விழுந்தது.
பிரபாகரனின் தந்தையின் மறைவு
பிரபாகரனின் தந்தையின் மறைவும் மஹிந்தவிற்கு ஒரு பெரும் அடியாகவிழும். தமிழர்கள் மீதான அவரின் அட்டூழியம் நிறந்த அடக்கு முறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக தமிழ் வாக்காளர்களுக்கு அமையும்.
எஸ் செல்லச்சாமி
மலையக மக்களின் தலைவர் எஸ் செல்லச்சாமியும் மஹிந்தவிற்கு எதிராகத் திரும்பியுள்ளார். பழம் பெரும் தலைவரான இவரது முடிவும் மஹிந்தவிற்கு பெரும் இழப்பு. முக்கிய முஸ்லிம் தலைவர்கள் மஹிந்தவிற்கு எதிராகவே செயற்படுகின்றனர். பல முஸ்லிம் பிரமுகர்கள் வர்த்தகர்களிடம் இருந்து ஆயுதக்குழுக்கள் கப்பமாக பெருந்தொகை பறித்தமையை முஸ்லிம் வாக்காளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். முஸ்லிம்களின் தலைவர் ரஊப் ஹக்கீம்அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவால் மிக மகிழ்ச்சி அடந்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரத் பொன்சேக்காவின் முடிவை அடுத்து மட்டக்களப்பு முதல்வரும் ஒட்டுக்குழுவைச் சேர்ந்தவருமான சிவகீதா பிரபாகரன் சரத் பொன்சேக்காவை தான் ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் மனித உரிமை மீறல்கள் ஆள் கடத்தல்கள் கொலைகள் மஹிந்த ஆட்சியில் அதிகரித்தமையால் அங்கு மஹிந்த செல்வாக்கை இழந்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க சரத்தை ஆதரிப்பதால் அங்கு மஹிந்த தோல்வியைத் தழுவுவார். காலி அம்பாந்ததோட்டைப் பகுதிகள் சென்றமுறை மஹிந்தவின் கோட்டையாக இருந்தது. இம்முறை இருவரும் சரிசமனாக இருக்கிறார்கள்.
அற்ற குளத்தில் இருந்து அறுநீர்ப்பறவைகள் பறக்கும்.
வெற்றி நிச்சயம் என்று இரு ஆண்டுகளுக்கு முதல் குடியரசுத் தேர்தலை அறிவித்த மஹிந்த இப்போது தோல்வியா என்ற சந்தேகத்தில் மன அழுத்தத்தால் பதிக்கப் பட்டுள்ளார். இவர் வெல்வது சந்தேகம் என்ற எண்ணம் வந்ததால் பலர் மதில் மேல் பூனையாக மாறி உள்ளனர். மஹிந்த அணியில் உள்ள இவர்கள் சரத் பொன்சேக்காவை கடுமயாக விமர்சிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். மஹிந்த தோற்பது நிச்சயம் என்று அறிந்தவுடன் பலர் கட்சித் தாவல்களை மேற்கொள்ளுவர். அது ஒரு தொடர் சரிவை (dominio effect) மஹிந்தவிற்கு ஏற்படுத்தும்.
7 comments:
அட நானும் இதையேத்தான் நினைக்கிறேன்
தோல்வியின் விழும்பில் நிற்கும் ராஜபக்ஷ சகோதரர்கள் (தமிழ் நாடு அரசு போல்)சலுகைகளை அள்ளி வீச ஆரம்பித்திருக்கிறார்கள்.போதாக் குறைக்கு சரத்தின் பாதுகாப்பை வேறு குறைத்து ,மிரட்டும் அரசியல் செய்கிறார்கள்.சிங்கள மக்களே சினம் கொள்ளும் அளவுக்கு தமிழ் மக்கள் மேல் பாசமும், நேசமும் கொண்டிருக்கிறார்கள். நாளய மகிந்தரின் யாழ் விஜயத்தின் போது உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கம் சம்பந்தமான அறிவுப்புகளும் வரலாமென ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.எது எப்படியோ குடா நாட்டு மக்கள் மூச்சு விட விட்டால் போதும்.
தமிழ் மக்கள் எப்போதும் ஆட்சி மாருவதை விரும்புவார்கள்
congress in indian election mischine techology may by used by ................
congress in indian election mischine techology may by used by ................
congress in indian election mischine techology may by used by ................
I heard that India had already sent its experts to rescue Mahindha.
Post a Comment