Wednesday, 6 January 2010

தமிழர்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும்? சரத்தையா மஹிந்தவையா?


என்னை இரண்டு காடையர்கள் பல குண்டர்களின் உதவியுடன் அடித்து வீழ்த்திவிட்டனர். இப்போது இரண்டு காடையர்களும் மோதிக் கொள்கின்றனர். அவர்களில் யாரை நான் ஆதரிப்பது என்பதல்ல கேள்வி. யார் காலை நான் வாரி வீழ்த்த வேண்டும் என்பதுதான் நான் யோசிக்க வேண்டியது. எவனுக்கு அதிக காயத்தை ஏற்படுத்த முடியும் என்பதைத்தான் நான் சிந்திக்க வேண்டும்.

சரத் பொன்சேக்கா இப்போது ஒரு ஓய்வு பெற்ற தளபதி. அவன் தோற்றாலும் ஒரு
ஒரு ஓய்வு பெற்ற தளபதி. மஹிந்த இபோது குடியரசுத் தலைவர். அவன் தோற்றால் செல்லாக்காசாவான். தமிழர்கள் மஹிந்தவைத் தோற்கடிப்பதால் அவனுக்கும் அவர் சகோதங்களுக்கும் பலத்த இழப்பை ஏற்படுத்த முடியும்.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த ஜே ஆர் ஜயவர்த்தன, பிரேமதாசா, சந்திரிக்கா ஆகியோர் பதவில் இருக்கும் போது தமிழர்களுக்கு கொடுமைகள் செய்தனர். அவர்கள் பதவியில் இருந்து விலகிய பின் வந்தவர்கள் அவர்களிலும் மோசமான கொடுமைகளையே செய்தனர். சரத் மஹிந்த இவர்களில் யார் வென்றாலும் தமிழர்கள் மீதான் கொடுமை அதிகரிக்கும்.

தமிழர்களின் இப்போதைய தேவைகளில் முக்கியமானவை.

1. போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரணம்.
2. கைது செய்யப் பட்ட போராளிகளின் விடுதலை
3. போர் குற்றங்களை பகிரங்கப் படுத்துதல்.
3. தமிழினத் துரோகிகளை புறந்தள்ளுதல்.
4. தமிழ்த் தேசியப் போராட்டம் மீள ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கம்.


போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரணம்.
மஹிந்த அரசு சீனா, பாக்கிஸ்த்தான், இந்தியாவுடன் இணைந்து தனது அதிகாரத்தை தக்க வைக்க முயல்கிறது. இம்மூன்று நாடுகளும் தமிழர்களின் புனர்வாழ்வைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. இம் மூன்று நாடுகளும் தமிழர்களின் விரோதிகள். இவை தமது பிராந்திய நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளவை. மஹிந்த அரசு சகல வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மீதும் பலத்த கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. மஹிந்த வெற்றி பெற்றால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பெரிய அளவில் நிவாரணங்களை எதிர் பார்க்க முடியாது.

கைது செய்யப் பட்ட போராளிகளின் விடுதலை
கைது செய்யப் பட்ட போராளிகள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஹிந்த அரசு எதுவும் எதுவும் கூறவில்லை. சரத் சில வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளார்.

போர் குற்றங்களை பகிரங்கப் படுத்துதல்
மஹிந்த அரசு போர்க்குற்றம் எதுவும் இடம்பெறவில்லை என்று சாதித்து வருகிறது. சரத் பொன்சேக்காவும் போர்குற்றங்களைப் பகிரங்கப் படுத்த மாட்டார். எந்த ஒரு படைத்துறை அதிகாரியையும் காட்டிக் கொடுக்க மாட்டார். ஆனால் சரத் பசில் ராஜபக்சவை பழிவாங்க சில நடவடிக்கைகளை எடுப்பார்.

தமிழினத் துரோகிகளை புறந்தள்ளுதல்
தமிழினத் துரோகிகளான இந்தியாவும் அதன் கையாட்களும் கருணா பிள்ளையான் போன்றோரும் மஹிந்தவின் பின்னாலேயே நிற்கின்றனர். இவர்களை புறந்தள்ள மஹிந்த தோற்கடிக்கப் படவேண்டும்.

தமிழ்த் தேசியப் போராட்டம் மீள ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கம்.
தமிழ்த் தேசியப் போராட்டம் மீள ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கு இந்தியா கையில் வைத்துள்ள திட்டம் இலங்கையின் அரசியலமைப்பின் 13-ம் திருத்தச் சட்டத்தை அமூலாக்குதல். தமிழர்களால் ஏற்கனவே நிராகரிக்கப் பட்டதுதான் இந்த 13-ம் திருத்தம். இதில் உள்ள வடக்கு-கிழக்கு இணைப்பை மஹிந்த ஒருபோதும் நிறைவேற்றமாட்டார் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வடக்குக்கிழக்கை இணைக்காத 13-ம் திருத்தம் கிழக்கில் தமிழர்களை அடிமைகளாக்கிவிடும். இலங்கை வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் காணாமற் போதல், ஆள் கடத்தல், கப்பம் போன்றவை மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெறுகின்றன. அவன் வென்றால் அவை இன்னும் மோசமாகும். இன்னும் 10 தலைமுறைக்கு தமிழர்கள் உரிமைப் போர் தொடுக்காத வகையில் அவர்களை அடக்கி ஆளவேண்டும் என்று மஹிந்தவும் அவன் சகோதரர்களும் கங்கணம் கட்டி நிற்கின்றனர். சரத் தான் ஆட்சிக்கு வந்தால் மனித உரிமை மீறல்களை இல்லாதொழிப்பதாகவும் இலங்கை அரசமைப்பின் 17-ம் திருத்தத்தை அமூல்செய்வதாகவும் மேற்குலகிற்கு வாககளித்திருக்கிறார். மனித உரிமை சரியாகச் செயற்படும் சூழலில்தான் தமிழர்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.

இந்தியாவைப் பழிவாங்கத் துடிக்கும் தமிழர்கள்.
நேற்றைய தினம் இலண்டனில் இருது ஒளிபரப்பாகும் ஐபிசி வானொலியில் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு தொலை பேசியில் பதில் அளித்த அனைவரும் மஹிந்தவிற்கு எதிராகவே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்றனர். இதில் கவனிக்கத் தக்க வேண்டிய ஒரு விடயம் இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைப் பழிவாங்க அது ஆதரிக்கும் மஹிந்தவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் துரோகத்தை மறக்கவோ மன்னிக்கவே மாட்டோம்.
இதைச் சொல்பவர் மலேசியப் பேராசிரியர் இராமசாமி அவர்கள். தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான். இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, என்றார் இராமசாமி.

இந்தியா இலங்கையில் மீண்டும் ஒரு முறை மூக்குடைபடுமா?

9 comments:

Anonymous said...

இந்தியா என்னும் சொறி நாயையும் சேர்த்து தோற்கடிக்க வேண்டும்..

Anonymous said...

300 இராணுவ அதிகாரிகள், 15,000 இந்திய துருப்புக்கள், 20க்கும் மேற்பட்ட பல்குழல் ஏவுகணைகள், 2 போர்க்கப்பல்களை கொடுத்து தமிழர்களை அழித்த இந்தியா ஒரு போர்க்குற்றவாளி.

Anonymous said...

எளியாரை வலியார் தாக்க,வலியாரை Australians தாக்குவாங்களோ!!!

Anonymous said...

அட்டூழியக்காரர்களைப் பழிவாங்க இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா?

Anonymous said...

அவர்களுக்குக் கருணா
நமக்கு ஒரு சரத் !

உணர்ச்சிகளை அடக்குங்கள்
அவர்களை மோத விடுங்கள் !

Anonymous said...

யார் வென்றாலும் ஒன்றுதான். இந்திய நாயின் வாலை நறுக்கும்வோம்..

Anonymous said...

UR OPNION IS VERY GOOD

Anonymous said...

தமிழ் தேசியம் என்ற பெயரில் அட்டூழியம் புரிந்த உங்களின் தோல்வி உங்களுக்கு உரிமையானதே!

Anonymous said...

தமிழ் தேசியம் என்ற பெயரில் அட்டூழியம் புரிந்த உங்களின் தோல்வி உங்களுக்கு உரிமையானதே!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...