Tuesday, 5 January 2010

தேர்தலில் காவற்துறையும் தாவற்துறையும்.


காவற்துறை
இலங்கயின் தேர்தலில் காவற்துறை முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது. இம்முறை பல தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிப்பார்கள். அவர்களின் வாக்குகள் முறை கேடாக பாவிக்கப் படாமல இருக்க காவற்துறை சரியான முறையில் பங்காற்ற வேண்டும். ஆனால் காவற்துறைக்குள் ஒரு அதிகார்பூர்வ கடிதம் ஒன்று பரவ விடப் பட்டுள்ளது. அதில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும்படி தெரிவிக்கப் பட்டுள்ளது.

தாவற்துறை
இலங்கையில் தேர்தலுக்கு முன் பல தாவல்கள் நடக்கும். முதல் தாவல் சரத் பொன்சேக்காவால் மேற்கொள்ளப் பட்டது. பாதுகாப்புத்துறையில் இருந்து அரசியலுக்கு ஒரு தாவல். சரத் யூஎன்பி கட்சியுடன் இணந்ததால். அவர் குடியரசுத் தலைவர் ரணில் விக்கிர்மசிங்க பிரதம மந்திரி என்று ஆனவுடன் ரணில் குடியரசுத் தலைவர் தான் பிரதம மந்திரி என்று நம்பியிருந்த எஸ். பி திசாநாயக்க மஹிந்த அணிக்குத் தாவினார்.

சிவாஜிலிங்கமும் தன் பங்குக்கு ஒரு தாவல் தாவினார். தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு அறிவிப்புச் செய்தார். அதற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் அங்குள்ள தமிழ் அமைப்புக்களின் அனுசரணையுடன் அங்கு தங்கியிருந்தவர் ஐரோப்பாவில் இருந்து வெளிக்கிடும் போது சும்மா வெளிக்கிடவில்லை. ஐரோப்பாவில் உள்ள தமிழர்களிடையே நடக்கும் போட்டியைப் பார்க்கும் போது தனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது. ஐரோப்பாவில் இருப்பதிலும் பார்க்க சிங்களவனின் சிறையில் இருக்கலாம். நான் அங்கு போகிறேன் என்று ஒரு தாவல் தாவினார்.

இந்தியாவின் வேண்டுதலின் பெயரால் மலையகக் கட்சிகளான தோட்டத் தொழிலாளர் காங்கிரசும் மலையக் ஐக்கிய முன்னணியும் மஹிந்தவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கின. தோட்டத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து இருவர் சரத் அணிக்குத் தாவினர்.

கருணா - பிள்ளையான் அணியில் இருந்து பலர் சரத் அணிக்குத் தாவுவதற்குத் தயாராக இருக்கிறார்க்ள். தாம் காணமல் போய்விடுவோமா என்ற அச்சத்தால் தயங்குகிறார்களாம்.

இப்போது ஸ்வர்ணமாலி எனும் சிங்கள நடிகை ஒருவர் சரத் அணிக்கு தாவியுள்ளார்.

இந்தியத் தாவல்
தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்தும் படி பலநாடுகள் அழுத்தம் கொடுத்தபோது அதை இந்தியாவின் உதவியுடன் எதிர் கொண்டு நாம் போரை முன்னெடுத்தோம் என்று சென்றமாதம் அறிவித்த இலங்கை அரசு நேற்று இன்னொரு தாவலைச் செய்துள்ளது. போரை நிறுத்தும் படி இந்தியா பலத்த அழுத்தும் கொடுத்ததாம் அதை தமது அரச தந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை ஏமாற்றி போரைத் தொடர்ந்தாதாக இலங்கை அரசு இப்போது கூறுகிறது.
இன்னும் பல தாவல்களுக்கு இடமுண்டு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...