Wednesday, 23 December 2009
வெளிநாடு வாழ் தமிழர்களைக் குறிவைக்கும் இந்தியா.
மே-2009 இற்குப் பின்னர் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் வேறு விதங்களில் குறி வைக்கின்றன. இலங்கை அவர்களுக்குள் பிளவு உருவாக்கவும் சிலரைத் தன்பக்கம் இழுக்கவும் முயற்சிக்கிறது. இந்தியா வெளிநாடுகளில் வாழ் தமிழர்களை முழுமையாகத் தன்பக்கம் இழுக்கவும் அவர்களிடையே இனி தனிநாட்டுக் கோரிக்கை சரிவராது உங்களுக்கு இனி இந்தியாதான் கதி என்ற எண்ணத்தை உருவாக்கவும் முயற்ச்சிக்கிறது. இந்தியா தமிழர்களை மோசமாக இலங்கை அரசு மூலமாகத் தோற்கடிப்பதன் மூலம் அவர்கள் தமக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு தன்னை நாடிவாருவார்கள் என்று கணக்குப் போட்டிருந்தது. அது முற்று முழுதான தப்புக் கணக்கு என்பதை இபோது இந்தியா உணர வேண்டிய நிலை வந்து விட்டது. தமிழர்கள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. இந்தியாவைத் தம் முதலாம் எதிரியாகக் கருதுகிறார்கள். இது பாக்கு நீரிணையில் இருபுறமும் நிலவும் கருத்து. மீண்டும் முருக்க மரத்தில் ஏற இந்தியா கேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி மூலம் ஒரு செய்தியை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு சொல்கிறது.
கொச்சைப் படுத்தப் படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம்.
கேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி அடிக்கடி தமிழர்களின் தேசிய போராட்டத்தைப் பற்றி கேவலமாக எழுதுபவர். அவர் கனாடாவில் நடந்த வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பற்றி இன்று கருத்துரைத்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 99%மான மக்கள் வாக்களித்ததாக வாக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. ஹரிகரன் அதை வேறு விதமாகப் பார்கிறார். கனடாவில் 300,000இருந்து 350,000 வரையான தமிழர்கள் வசிக்கிறார்கள் அவர்களில் 48000 தமிழர்கள் மட்டும் வாக்களித்துள்ள படியால் இது சிறுபான்மை வாக்களிப்பு என்று சொல்பவர்களின் கருத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழர்கள் இதற்கு முன்பு போரைத் தொடருவதா இல்லையா என்ற வாக்கெடுப்பை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் போர்நிறுத்தக் கோரிக்கையை எத்தனை தடவை முன்வைத்தனர் என்பதை கேணலின் கோணல் சிந்தனைக்குப் படவில்லை. இந்த மாதிரி வேறு பல விடயங்களுக்கு ஏன் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கேணல் கரிகரன் அவர்கள். அவரது கருத்துப் படி செய்வதாயின் தமிழர்கள் வாரம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். ஹரிகரன் மேலும் சொல்கிறார் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் வேறு வழியின்றி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கையில் எடுத்திருக்கிறார்களாம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முடிவுகளில் இருந்து ஒன்று நன்கு புலனாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கும் தமிழர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையினரே. கருத்தில் எடுத்துக் கொள்ளப் படத் தேவையில்லாத எண்ணிக்கையினரே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கின்றனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பலத்த எதிர்ப்பு இருக்குமாயின் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருப்பர்.
இதை ஹரிகரனும் அவரது "எஜமானர்களும்" புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கையில் நடக்கும் பல விடயங்களைச் சுட்டிக் காட்டிய ஹரிகரன், வன்னி முகாம்களில் நடந்த வதைகள் பற்றியோ அல்லது சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றமை பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. அது பற்றிக் குறிப்பிடுவது அவர்களது சிங்கள "எஜமானர்களை" ஆத்திரப் படுத்தும். பூனூல்காரர்களின் சதிகளால் கருகிப்போன இளம் பூக்களைப் பற்றி ஹரிகரன் அறியவில்லையா? எத்தனை ஆயிரம் சிறார்களை இலங்கை அரசு இந்திய செய்மதித் தகவல்களின் துணையுடன் கொன்று குவித்தது? அதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டாரா இந்தக் கோணல் புத்திக் கேணல்?
ஹரிகரன் தனது கட்டுரையில் வேலிக்கு ஓணானாக ரொஹான் குணத்திலக என்ற சிங்களப் பேரினவாதியை சாட்சிப்படுத்துகிறார். ரொஹான் சொன்னாராம் இனி ஒரு தலைமை உருவாக முடியாத படி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டு விட்டார்களாம். அப்படியானால் ஏன் இலங்கை அரசு தொடர்ந்தும் பாதுகாப்புச் செலவுகளை அதிகரித்துக் கொண்டே போகிறது? சரத் பொன்சேக்கா ஏன் படைகளின் எண்ணிக்கையை மூன்று இலட்சமாக அதிகரிக்க வேண்டுமென்றார்?
இன்னும் சொல்கிறார் ஹரிகரன்: வெளிநாடுவாழ் தமிழர்கள் இரண்டாகப் பிளவு பட்டு நிற்கிறார்களாம். ஒரு பிரிவு நாடுகடந்த அரசு அமைக்கவிருக்கும் உருத்திரகுமார் தலைமையிலாம். மற்றது நோர்வேயில் வாழும் தொடர்ந்து ஆயுத போராட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நெடியவன் தலைமையிலாம். ஆனால் தமிழர்கள் இரண்டையும் ஆதரிக்கிறார்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. தமிழர்களுக்கு இரண்டும் தேவை. உருத்திரகுமாரன் என்று சொன்னார் இனி ஆயுத போராட்டம் சரிவராது என்று? நெடியவன் என்று சொன்னார் நாடுகடந்த அரசு தேவையற்ற தென்று? தமிழர்கள் பிளவு படவில்லை. அது உங்களது கனவு ஹரிகரன் ஐயா.
சும்மா ஆடுமா சோழியன் குடுமி.
சரி இப்படி எல்லாம் தமிழர்களுக்கு வேறு வழியில்லை வேறு கதியில்லை என்று சொல்கிற ஹரிகரன் என்ன தீர்வை தமிழர்களுக்கு முன்வைக்கிறார் தெரியுமா? புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் 22-11--2009இலன்று சுவிற்சலாந்து சூரிச் நகரில் இலண்டன் தமிழ் தகவல் நிலையம் ஏற்படுத்திய இலங்கைக்கான சர்வதேச செயற்குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதுதானாம். இந்தியச் சூழ்ச்சியால் நடந்த இந்தக் கூட்டம் முடிவு எடுக்காமலேயே குழப்பத்தில் முடிந்தது. இந்திய அடிவருடிகளே இதில் குழப்பம் விளைவித்தார்கள். அதற்கு சகல தமிழ் முஸ்லிம் கட்சிகள் வந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகரன். போக்குவரத்துச் செலவு, கைச்செலவுப் பணம் போன்றவை கொடுத்தால் முழு இலங்கையுமே சூரிச் வரும்! இப்படிபட்ட (குழப்பத்தில் முடியும்) கூட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவினைக்கு புத்துயிர் கொடுத்தால் மீண்டும் ஒரு தம்மைத் தாமே தோற்கடிக்கும் நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படும் என்ற செய்தியுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் ஓய்வு பெற்ற கேணல் ஹரிகரன். ஆனால் தமிழர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள் ஹரிகரன் ஐயா அவர்களே: "விழ விழ எழுவோம்"
உங்கள் இந்தியாவும் உங்கள் எஜமானர்களும் இன்னும் எத்தனை முறை விழுத்துவீர்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
8 comments:
Ur right man.. nice post.. We Tamils , let us stand united... sorry for typing in English... I have no Tamil fonts
சாதி வெறி பிடித்த நாய்க்குச் சாட்டையடி
விழ விழ எழுவோம் வெற்றி பெறுவோம்.
கோணல் கரி உனக்கு முகத்தில் கரி பூசியாகிவிட்டது
விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கக்கக்க போ
கனடாவில் வாக்களிக்கும் தகுதி சும்மார் 50 000 -80 000 தான் வரும் அது இந்த கோணங்கிக்குத் தெரியவில்லை
ஆனாலும் ஏற்பாட்டாளர்கள் 50 000 தான் எதிர்பார்த்தார்கள்
Dear Ellalan, thank u 4 de wonderful info.
Hariharan, pothikiddu poiyaa
Dont mistake india its not ur enemy.....india is supporting u but the dirty politicians are playing a big game on U...
we're all well wishers of uuuuuuuuu...... we too have heart
Ezhalathil irakum ovoruvanum en sagodaran.Nalla naalum Nalla Seithiyum viraivil varum ....
ippadiku,
Tamizhan
விழ விழ எழுவோம்
Post a Comment