Saturday, 14 November 2009

மீண்டும் இந்தியாவின் பொய்த் தூது


இலங்கையில் தமிழ் இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி தூதுவர்கள் வந்து கொண்டிருந்தனர். அது இலங்கையில் போர் நிறுத்தக் கோரிக்கை விடுக்க என்று வெளியில் சொல்லப் பட்டது. ஆனால் அது இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போரில் இலங்கை அரசின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்பதைப் பற்றியதாகவே உண்மையில் அமைந்தது. போரை முடிக்கவில்லை தமிழர்களை முடித்தனர்.

அண்மையில் இந்தியப் பாராளமன்றக் குழுவொன்று இலங்கை வந்தது. அது முகாம்களில் வாழும் தமிழர்களின் நலன்கள் சம்பந்தமாக என்று கூறப்பட்டது. அவர்களின் குறைபாடுகளை அறிய என்று சொல்லப் பட்டது. வன்னி முகாம்களை நேரில் பார்க்காமலே ஒரு சுவிஸ் நாட்டுப் பேராசிரியர் வன்னி முகாமகளில் சிறார்களை தடுத்து வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். அது சட்டவிரோதமானது என்று இடித் துரைத்தார். ஆனால் வன்னி முகாம்களில் சிறிவர்களைத் தடுத்து வைத்திருப்பது சட்ட விரோதமென்று மஹிந்த ரஜபக்சேயிற்கு பொன்னாடை போர்க்கவந்த பன்னாடைகளுக்குத் தெரியவில்லை.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை அங்கு மக்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள் என்று அறிக்கைவிட்டது ஒருவாரத்திற்கு முன். ஆனால் அது மஹிந்த ரஜபக்சேயிற்கு பொன்னாடை போர்க்கவந்த பன்னாடைகளுக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் பாராளமன்ற உறுப்பினர்கள் வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியில் இலங்கை அரசைப் புகழ்ந்து தள்ளினர். இவர்கள் இலங்கை வந்து சென்று திரும்பிய பின் இந்திய அரசிற்கு சமர்ப்பித்த அறிக்கை இன்னும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. இலங்கை அரசு சில வன்னிமுகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை விடுவிப்பது என்று அவர்களுக்கு தெரியாத இடங்களில் வேண்டுமென்றே நள்ளிரவில் கொண்டுபோய் இறக்கிவிட சென்னையில் கருணாநிதியைப் பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டப் பட்டான.

இன்று ஐரோப்பியாவில் ஒளிபரப்பான கலைஞர் தொலைக் காட்சியின் செய்தியில் இந்திய நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜி தமிழர் நலன்கள் குறித்து இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்த இலங்கை செல்கிறார் என்று குறிப்பிட்டது. ஏன் நிதி அமைச்சர்? ஏன் வெளிவிவகார அமைச்சர் செல்லவில்லை? இந்தப் பிரணாப் சோனியாவிற்கு வேண்டியவர். இந்தப் பயணம் குடும்ப நலன் சார்ந்ததா? அல்லது இலங்கைக்கு இன்னும் நிதி உதவி செய்வது பற்றி ஆராயப் படுமா? ஆனால் கொழும்பில் இருந்து வரும் செய்திகளின்படி பிரணாப் சரத் பொன்சேக்கவின் பதவி விலகலும் அவரது அரசியல் நுழைவும் பற்றி ஆராய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது என்று அறியப் படுகிறது. என்று முடியும் இந்தப் பொய்த் தூதுகள்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...