
பிரித்தானியாவின் மன்செஸ்ரர் பகுதியில் 20 வயதான கல்லூரி மாணவிக்கு நாளொன்றுக்கு 30 தகவல்கள் அனுப்பித் தொல்லை கொடுத்தவர் வாழ் நாளில் அப்பெண்ணிடம் தொடர்பு கொள்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளார். ஜேசன் சிமித் என்பவர் அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற் என்னும் பெண்ணை விரும்பினார். அவரது விடுப்பத்திற்கு அவர் மறுத்ததால் அவருக்கு மிரட்டல் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். உன் முகத்தை கத்தியால் சீவுவேன், உன் தாயைக் கற்பழிப்பேன், தந்தையைக் கொல்வேன் எனப் பலதரப்பட்ட மிரட்டல்கள் ஜேசன் சிமித்தால் விடுக்கப் பட்டது. அவரது தொடர்புகளை அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற் துண்டித்த போதும் அவர் வேறு வேறு விதமாக 40 வகைகளில் புதுப் புது கணக்குகளைத் திறந்து அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற்றை மிரட்டிக் கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற்றின் தொலைபேசிக்கு நாளொன்றிற்கு 30 தடவை ஜேசன் சிமித்தால் அழைப்புக்கள் விடுக்கப் பட்டது.
அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற் எல்லாவற்றையும் பொறுக்க முடியாமல் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜேசன் சிமித்திற்கு ஒருவருட ஒந்திவைக்க்ப் பட்ட சிறைத்தண்டனை விதித்து வாழ்நாளில் அப்பெண்ணுடன் தொர்புகொள்ளக் கூடாது என்று தடையும் விதித்ததுடன் அவரை மனநல சிகிச்சைக்கு உட்படுத்தும் படியும் பணித்தது.
1 comment:
மிரட்டுவதால் கொஞ்ச நஞ்சம் இருக்கும் விருப்பும் இல்லாது போய் விடும் என்பதை புரிந்து கொள்ளாத ஆண்.
Post a Comment