
இலங்கையில் ஒரு ஆயுத போராட்டம் முதலில் தொடங்கியிருக்க வேண்டிய இடம் மலையகம். இந்தியாவில் இருந்து ஏமாற்றிக் கொண்டு வரப் பட்டு மிகமோசமான நிலையில் குடியமர்த்தப் பட்டு. மிக மோசமாக சுரண்டப் பட்டு வாக்குரிமை பறிக்கப் பட்டவர்கள் மலையகத் தமிழ் தொழிலாளர்கள். இவர்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களுடன் ஒன்றுபடாமல் ஜவகர்லால் நேரு அவர்கள் தடுத்தார். அவர்களைப் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களுடன் சேர்ந்தியங்குமாறு நேரு கட்டளையிட்டார். அப்போதைய தலைவர் சௌமியமூர்ந்தி தொண்டமானும் அவ்வாறே செய்தார். சிங்களவர்கள் அவர்கள் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு அது உள்நாட்டுப் பிரச்சனை தன்னால் தலையிட முடியாது என்று தட்டிக்கழித்தார். இலங்கையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றியபோது பாக்கிஸ்தான் தனது நாட்டினர் சகலரையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. ஆனால் இந்தியா ஏற்க முடியாது என்று மறுத்தது. இதனால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆனார்கள்.
மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பிரபல நாடகம் இருந்தது. அதன் பெயர் காலங்கள் அழுவதில்லை. அதில் ஒரு கட்டம். கதாநாயகி உண்டியலில் பணம் சேர்ப்பாள் சிறிது சிறிதாக. வீட்டில் இருந்த குடிகாரன் ஒருவர் அதைத் திருடிக் குடித்து விடுவார். அறிந்த கதாநாயகி அழுது புலம்புவாள். நான் கதிர்காமம் போய் கந்தனைத் தரிசிக்கவும் கடல் பார்க்கவும் என்று சேர்த்த காசைத் திருடி விட்டான் என்று. வீட்டில் இருந்த பெரியவர் சொல்வார் "கடலையே காணாத நம்மை கள்ளத் தோணி என்கிறாங்களே!" என்று. அவர்களைக் கள்ளத் தோணி என்றவர்கள் இன்று உலகெங்கும் கள்ளத் தோணிகளாய் அலைகிறோம்.
தமிழர்களை ஆயுதபாணியாக்கி சிங்களவர்களுடன் சண்டையிட வைத்து பின்னர் சிங்களவர்கள் பக்கம் சேர்ந்து தமிழர்களை அழித்தொழிக்க சகல உதவியும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கிய இந்தியா இப்போது மலையத் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய முயல்கிறது. மலையகத் தமிழர்கள் பலகாலப் போராட்டங்களுக்குப் பின்னர் வாக்குரிமையைப் பெற்றனர். எழுபதுகளில் வட-கிழக்கு இலங்கையில் ஆயுத போராட்டம் தீவிரமடையும் போது அது மலையகத்திற்கும் பரவாமல் இருக்க அவர்களின் வாக்குரிமையை ஜே ஆர் ஜயவர்த்தனா வழங்கினார். அந்த வாக்குரிமையை மலையகத் தலைவர்கள் தமக்கு மந்திரிப் பதவி பெறுவதற்குப் பயன் படுத்தி வருகின்றனர்.
இப்போது நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மலையக மக்களின் அதிக வாக்கு வங்கியைக் கொண்ட தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மஹிந்த ராஜபக்சேவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்குவதாக நேற்று அறிவித்தது. நிபந்தனை அற்றவிதத்தில் ஆதரவு வழங்குவதற்கு மஹிந்த அப்படி என்ன தமிழர்களின் நண்பரா? அவர் இதுவரை ஆட்சியில் இருக்கையில் தமிழர்களுக்கு என்ன நன்மை செய்தார்? மலையகப் பாடசாலைகளில் ஆசிரியப் பற்றாக் குறையை, தொழிலாளர்கள் குடியிருப்பின் மேம்பாட்டை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை... இப்படி ஏதாவதைக் கேட்காமல் ஆதரவு வழங்க அவர்கள் முன் வந்தது ஏன்? ஒரே காரணம் இந்தியாவின் வற்புறுத்தல். மஹிந்த ஏதாவது மலையகத் தொழிலாளர்களுக்கு வழ்ங்குவதாக வாக்குக் கொடுத்தால் அதே காரணத்திற்காக சிங்களவர்கள் அவருக்கு வாக்களிக்காமல் விடலாம். இலங்கையின் இன ஒற்றுமை அப்படி. இதற்காகவே இந்தியா நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கும் படி தோட்டத் தொழிலாளர் காங்கிரசைப் பணித்தது. காங்கிரசும் அப்படியே செய்கிறது. அதாவது சிங்களவனைத் திருப்திப் படுத்த இந்தியா தமிழர் நலன்களைப் மீண்டும் பலியிடுகிறது. கோபாலபுரத்தார் இப்போதும் ரணிலுக்கு வாக்களிக்கச் சொல்லுவாரா? அவருக்கு ஏற்கனவே அவசரப் பட்டு டெல்லி மேலிடம் ஒரு கட்டளையை வழங்கி விட்டது.
2 comments:
கவிஞர் வேல்தர்மா..
பன்னிகளை பற்றி பேசி தங்கள் பொன்னான நேரத்தையும் உழைப்பையும் செலவிட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.. என்னதான் பொங்கல் வடை என்று பன்னிக்கு வைத்தாலும் அது திங்கறதான் ஆசையோடு தின்னும்..அது போலத்தான் இந்த ஈழ -இந்திய-மலையக விவகாரம் எவ்வளவு தான் புரியவைத்தாலும் அரசியல் பன்னிகள் அவர்களுக்கு புரியாது.. புரியாது என்று சொல்வதைவிட மடைமாற்றும் முயற்சியாகும்.. இனி வரும் சட்ட சபை தேர்தல்களில் தமிழின எதிரி காங்கிரசு ஈழத்தமிழருக்காக 5000 கோடி ஒதுக்கினேன்..10000 கோடி ஒதுக்கினேன்
என்று புளுகினாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.. ஏனென்றால் தேர்தல் நாளன்று குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சொந்த அக்கா தங்கயை இங்கு கூட்டி கொடுக்கும் கூட்டம் அதிகம்.. அந்த மாமா வேலையை செய்ய அவரது அடிப்பொடிகள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்..அவன் மறுபடியும் ஜெயிப்பான்.. இப்படியும் ஒரு நாடு! சொந்த நாட்டு மீனவர்களை அடுத்த நாடு சுட்டு கொல்ல பயிற்சியளிக்கும் நாடு! இந்த நாட்டில் நாங்கள் பிறந்தது வெட்ககேடு
நல்ல கட்டுரை. தமிழர் அழிவில் சுகம் தேடும் ஒரு கூட்டம். அதைத் தாங்க ஒரு தமிழர் கூட்டம். என்ன சொல்ல!
Post a Comment