Wednesday, 18 November 2009

கருணாநிதியின் கண்ணீரின் பின்னணி என்ன?




இலங்கையில் தமிழர்கள் வகை தொகையின்றிக் கொல்லப்படும் போது அவரால் சொக்கத் தங்கம் என வர்ணிக்கப் பட்ட சோனியா காந்தியிடம் தன் குடும்பத்திற்கு மந்திரிப் பதவி கேட்டு மண்டியிட்ட கருணாநிதி இப்போது அழுகிறேன் என்று ஏன் அறிக்கை விடுகிறார்?

இலங்கையின் இன அழிப்புப் போரை இந்தியாவின் உதவி இன்றி சிங்களவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று பலதரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இலங்கைக்கு பலவழிகழிலும் உதவி செய்த சோனியா ஆட்சியின் பங்காளியான கருணாநிதி ஏன் இப்போது தான் அழுவதாக அறிக்கை விடுகிறார்?

சோனியா-கருணநிதியின் கூட்டணி அரசின் தூதுவர்கள் கொழும்பு சென்று மூன்று நாட்களுக்குள் ( இந்தியப் பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு) போரை முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தியதால் மோசமான ஆயுதங்களைப் பாவித்து பல்லாயிரம் அப்பாவிகளை இலங்கை அரசு கொன்று குவித்ததை மறந்து இப்போது கருணாநிதி ஏன் இந்தக் கண்ணீர் அறிக்கை விடுகிறார்?

ரணில் கருணாநிதியிடையே "டீலா நோ டீலா"?
ஆறுமாதங்கள் எதுவுமே நடக்காதது போல் இருந்த கருணாநிதி இப்போது அழுவதாக அறிக்கை விடுவது ஏன்? அழுது அழுதுதான் செம்மொழி மாநாடு ஏற்பாடுகள் செய்கிறாரா? கருணாநிதியின் அறிக்கையின் முக்கிய பகுதி ரணில் விக்கிரமசிங்கேயிற்கு வக்காலாத்து வாங்குவதுதான். தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேயிற்கு வாக்களித்து இருந்தால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதாம். இந்தியா ரணிலை தனது கையாளாக மாற்ற முயற்சி எடுக்கும் வேளையிலேயே கருணாநிதியின் கண்ணீர் அறிக்கை வெளிவருகிறது. இந்தியப் பேரினவாதிகளின் கைக்கூலி கருணாநிதி என்பது உண்மையா? அந்த மேலிடத்து உத்தரவின் பேரில் கருணாநிதி ரணிலுக்கு வக்கலாத்து வாங்கி வரும் தேர்தலில் தமிழர்களை ரணிலுக்கு வாக்களிக்க கருணாநிதி பிரச்சாரம் செய்கிறாரா? அதற்காகத்தான் இந்தக் கண்ணிர் அறிக்கையா? அல்லது ரணிலுக்கும் கருணாநிதிக்கும் இடையில் ஏதாவது "டீலா"?

தமிழ் தமிழ் என்று சொல்லிப் பிழைப்பு நடாத்திய கருணாநிதி இப்போது தமிழினக் கொலையாளிகளுடன் கை கோத்துப் பிழைப்பு நடாத்துகிறாரா?

7 comments:

புலவன் புலிகேசி said...

இவங்க இப்படித்தான் தல நாடகக் காரர்கள்

Anonymous said...

All for money....

Anonymous said...

அவரை அழவிடுங்கள்
அவர் துரோகங்கள்
அதில் கரையட்டும்.
அவரை அழவிடுங்கள்

சக்திவேல் said...

கொத்துக்கொத்தாக தமிழர்களை இலங்கைக்கொடூரன் கொன்றழித்தபோது மௌனமாக அழுகாமல், வாய்விட்டு அழுதாதாரா இந்த கருனாநிதி? இல்லை முகாமுக்குள் மிருகங்களை விட கேவலமான நிலையில் நடத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்று தெரியாமல் நடைப்பினம் போல வாழ்ந்து செத்துக்கொண்டிருப்பதை பார்த்து சுவற்றில் முட்டி கொண்டு அழுதாரா?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஒவ்வொரு துளிகளுமே
ஒவ்வொரு இலட்சம் தருமே!
அழு தாத்தா! நன்றாக அழு!

Anonymous said...

பிழைக்கத் தெரிந்த மனுசன்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...