
இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 1970களின் பிற்பகுதியில் தமிழர்களின் தேசிய போராட்டத்திற்கு உதவியது. 1980களின் பிற்பகுதியில் தமிழர்களின் முதலாம் எதிரியாக இந்தியா மாறியது. பின்னர் இந்தியா இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டுக் கொண்டது. இலங்கைக்கு உதவி செய்யது வேண்டிய அதன் தலையாய பணி என்ற பரிதாபகரமான சூழலில் இந்தியா அகப்பட்டுக் கொண்டது. ஆனால் இந்தியாவின் பரம விரோதிகளான சீனா பாக்கிஸ்த்தானுடன் இலங்கை உன்னத நட்புறவைப் பேணிக் கொண்டே இருக்கிறது. எந்த ஒரு கட்டத்திலும் சிறிய நாடான இலங்கையைத் தனது கட்டுப் பாட்டுக்குள் இந்தியாவால் கொண்டுவர முடியவில்லை.
இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை இந்தியா பிரித்தெடுத்தது. ஆனால் இலங்கையின் கிழக்குப் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை விரும்பாத நாடொன்று கருணாவிடமிருந்து பிள்ளையானைப் பிரித்தெடுத்து கருணாவைச் செல்லாக் காசாக்கியது. திவிர சிங்களத் இனவாதிகளின் உதவியுடன் கருணா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று அங்கு அகதி தஞ்சம் கோரினார். அங்கிருந்து விரட்டப் பட்ட நிலையில் கருணா இப்போது இலங்கை அரசின் தயவில் வாழ்ந்து வருகிறார். இது இந்தியாவின் இலங்கை மீதான கொள்கைக்குக் கிடைத்த பலத்த தோல்விகளில் ஒன்று.
இலங்கையின் இன அழிப்புப் போரில் இந்தியா சகல உதவிகளையிம் வழங்கி இலங்கையை வெற்றி(?) கொள்ள வைத்தது. அதுவே இப்போது இந்தியாவிற்கு வில்லங்கமாக உருவெடுக்கிறது. இலங்கையின் போர் வெற்றி(?) இலங்கையில் ஒரு புதுத் தலைமையை உருவாக்கிவிட்டது. அத் தலைமை தனக்குத் தலையிடியாகா மாறும் என்பதை இந்தையாவால் முன்கூட்டியே அறிய முடியவில்லை. அல்லது அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அதன் கவனம் முழுக்க இந்திய அதிகார மையத்தின் குடும்பப் பகைமைக்குப் பழிவாங்குவதிலும் பார்ப்பன நிர்வாகிகளின் சாதி நலன்களைப் பேணுவதிலும் இருந்தது. அந்தப் புதுத் தலைமைதான் சரத் பொன்சேக்கா.
சரத் பொன்சேக்கா மற்ற தீவிரவாத சிங்களவர்களைப் போலவே ஒரு இந்திய விரோதி இலங்கை பாக்கிஸ்த்தான் சீனா இரசியா ஆகியவற்றுடன் நல் உறவுகளைப் பேணவேண்டும் என்ற கொள்கையுடையவர். அப்படிப்பட்ட ஒருவர் இலங்கையின் படைத் தளபதியாக வந்தது இந்திய வெளியுறவுத்துறைக்கும் குறிப்பாக உளவுத் துறைக்கும் கிடைத்த படு தோல்வி. அடுத்தது சரத் பொன்சேக்கா ஒரு அரசியல் தலைவராக உருவாகியது இந்தியாவிற்குப் பாரிய அடி. தமிழ்த் தேசிய போராட்டத்தை ஒடுக்க இந்தியா செய்த உதவியே இந்தியாவிற்கு பாரிய பிரச்சனையாக உருவாகிறது. ஒன்று இந்திய விரோதக் கொள்கைகளுடைய தீவிர சிங்களப் பேரின வாதிகளின் கை இலங்கையில் ஓங்கியது மற்றது பாக்கு நீரிணையின் இரு புறமும் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் இந்திய விரோதிகளாக உருவானது.
1 comment:
ஆப்பிழுத்த இந்தியக் குரங்கு....
Post a Comment