விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலைப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். எல்லாம் வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். ஒரு பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை.
இடையில் ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியர் ஒருவர் பதவி நீக்கப் பட்டார். விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் என்பவர்தான் அவர்.
அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், காணிவீடுகள் விற்பனத் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது.அண்மையில் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் நிலக்கீழ் அறையில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருந்த பெரிய ஒரு படையணிக்கு ( விகடன் மொழியில் பட்டாலியன்) தேவையான ஆயுதங்களை இலங்கை அரசு கைப் பற்றியதாக விகடன் தகவல் வெளியிட்டது. விசாரித்ததில் அக் கோவிலில் அந்த அளவு பெரியா நிலக்கீழ் அறை இல்லை என்று தெரியவந்தது. நிலக்கீழ் அறை உண்டு அது கோவில் நகைகள் பணம் போன்றவற்றை வைத்திருக்கக் கட்டப் பட்ட சிறிய அறை என்று தெரியவந்தது.
இப்போது விகடன் வெளிவிடும் புதிய செய்தி "பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!' என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, 'இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?' என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது."
ஆனந்தவிகடனில் வெளிவரும்வரை இப்படி ஒரு செய்தி வேறு எங்கிருந்தும் வரவில்லை. உண்மையான செய்தி என்ன வென்றால் விடுதலைப்புலிகள் வெளிவரும் சூழல் இன்னும் உருவாகவில்லை.
விகடனின் அடுத்த செய்தி: இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!' என்று அறிவித்தாராம் அப்போது. இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட னராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!'' என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்..
விகடன் சொல்லும் படம் இந்த ஆண்டு மே மாதம் 17ம் திகதிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் எடுக்கப் பட்டிருக்க வேண்டும். அப்போது முள்ளிவாய்காலிலோ நந்திக்கடலிலோ இப்படி ஒரு புகைப்படம் எடுக்க வாய்ப்பில்லை. 24 மணிநேர குண்டுவீச்சுக்களுக்கு மத்தியில் இப்படி ஒரு புகைப் படம் இப்படி தூய ஆடைகளுடன் எடுத்திருக்க முடியாது. இப்படத்தைப் பிரிசுரித்த அதிர்வு இணையத் தளம் பொட்டு அம்மானும் பிரபாகரனும் இணைந்து எடுத்த படம் மே 17ம் திகதிக்குப் பிறகுதான் எடுக்கப் பட்டது என்ற பொருள்படத்தான் எழுதியிருந்தது. விகடன் ஏன் இப்படி ஒரு புளுகு மூட்டையை மீண்டும் அவிழ்த்து விட்டது? துட்டுச் சம்பாதிக்கவா?
10 comments:
ம்..... கொஞ்சம் யோசிக்கிற ஆக்களும் உங்க இருக்கிறயளோ! அதுதான் உப்பிடி மழையாக் கொட்டுதோ!
புலிகளின் நிலைமை இப்படிப் போய்விட்டது.
தற்போதைய நிலையில் புலிகளின் தலைமையாக புலி உறுப்பினர்களில்லை. அத்தலைமை இந்தியாவில் இருக்கிறது, சீமான், நெடுமாறன், ஜெகத் கஸ்பார், திருமா என்ற பெயர்களில்.
ஒவ்வொருவரும் புலிகளின் பெயர்களில் தமது நலன்களை மேம்படுத்துகின்றனர். சிலர் நல்ல வியாபாரம் செய்கின்றனர். பத்திரிகைகள் இன்னும் சுத்தம். இவற்றையெல்லாம் நம்புவதற்கு இன்னமும் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தான் வேதனை. இப்படிப்பட்ட ஏமாளிகளைக் கொண்ட இனம் அண்மையில் நடந்த பேரழிவுக்குத் தகுதியானதே.
புலிகளின் நிலைமை இப்படிப் போய்விட்டது.
தற்போதைய நிலையில் புலிகளின் தலைமையாக புலி உறுப்பினர்களில்லை. அத்தலைமை இந்தியாவில் இருக்கிறது, சீமான், நெடுமாறன், ஜெகத் கஸ்பார், திருமா என்ற பெயர்களில்.ஃஃஃ
இவர்கள் செய்வது சரியோ பிழையோ.. தமிழக மக்களை வீச்சுடன் வைத்திருக்க இவர்கள் தேவை. ஆகவே குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு எதிரி, துரொகி அனைவரையும் எமக்கு ஆதரவாக பாவிப்போம்.
http://thatstamil.oneindia.in/news/2009/11/13/who-will-read-the-message-on-heroes.html
இந்த ஆறு வித்தியாசங்கள் இருக்கட்டும். யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை நான் சொல்கிறேன். அது என்னவென்றால் புலித்தலைமையிடம் ஒரே ஒரு ஜட்டி தான் இருந்தது. அதை எலித்தலைவர் , ச்சீ புலித்தலைவர் பிரபாகரன் போட்டு சென்று மோட்டுச்சிங்களவனிடம் அடிபட்டு செத்துவிட்டதால் இன்னொரு ஜட்டி வாங்க பொட்டு அம்மான் என்னிடம் தான் வந்தார். இந்த படம் எடுக்கும் போது உள்ளே ஜட்டி போடாததால் தான் அவரின் முகம் சீரியஸாக இருந்தது. சரியான காரணம் இது தான். இப்படிக்கு ரகசியம் வெளியிடுவோர் சங்கம்.
ஆனால் நாங்கள் எல்லோரும் ஒன்றை மறந்துவிடக்கூடாது ராஜபக்சேவுக்கே தமிழ் சொல்லிகொடுத்தவர் எம் தலைவன் பிரபாகரன் தான்.
மிக நல்ல பதிவு வேல்தர்மரே
தங்க முகுந்தன்உங்களின் கருத்து வேதனை அழிக்கும் படி உள்ளது உம்மை போல் நானும் ஒரு ஈழத்தவனே
எமக்காக உண்மை உள்ளம் கொண்ட அயிரம் வேல்தர்மர்கள் உள்ள தமிழகத்தின் ஆட்சீ பீடத்தின் தவற்றிகு
பாவம் தற்மர் என்ன செய்யமுடியும் எமக்காக புதிய அத்தியாயத்தை கொடுத்த முத்துக்குமரனும் அங்குதான் ஆகுதி ஆயினார் நண்பர் கொண்டோடி உம்மை போல் எட்டப்பர் மற்றும் கருணா போல் கண்ணுற முடியா பாதீனியங்கழும் என்னமும் உங்கள் பங்கிற்கு உமது பெயரிற்கேற்ப பின்னூட்ம் (கொண்டோடி) இவற்றை எல்லாம் நம்புவதற்கு இன்னமும் ஈழத்தவரோ தமிழகத்திலோ உண்மை அறிந்தோர் எவரும் இல்லை உம்மை போல் பகலாந்தைகள் பலர் உண்டு
இந்தப்புகைபடமானது 2008ல் இடம் பெற்ற தமிழர் விடுதலை கூட்டணியினருடனான சந்திப்பின்போதானது
போடாங்கோ....ஏன்டா மறுபடியும் குழப்பரே....வேற வேல இல்லையா....தலைவர் வருவார் வருவார் வருவார். விகடன் தேவிடியா பசங்களுக்குத்தான் புத்தி இல்ல. உங்களுக்குமா?
varuvaar anaal varamaadaar...
The time is not right for the freedom fighters to resurface now...
Post a Comment