
இந்திய உளவுத்துறையின் முன்னாள் நிபுணர் கேணல் ஹரிகரன் GSP+ இலங்கைக்குக் கிடைக்காது என்று இம்மாதம் ஏழாம் திகதி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருந்தார். இவர் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கம் தொடர்பாகக் கட்டுரைகளை எழுதுபவர். பொருளாதார நிபுணர் அல்லர். ஆனாலும் GSP+ என்னும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியவர்த்தகச் சலுகையைப் பற்றி கேணல் ஹரிகரன் இவ்வளவு அக்கறை எடுத்தது ஏன்?
GSP+ பற்றி அறிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்.
இப்போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகையை நிறுத்தப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வர்த்தகச் சலுகைக்கும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இலங்கை இச்சலுகை இழப்பால் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் நேக்கவிருக்கிறது. இந்நெருக்கடியைத் தவிர்க்க இலங்கை தனது நட்பு நாடுகளின் பொருளாதார உதவியை நாடப் போகிறது. இலங்கையின் முதல் தெரிவு சீனாவாகும். சீனா இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்யும் போது இந்தியாவும் அதற்குப் போட்டியாக இலங்கைக்குப் பணத்தை வாரி இறைக்க வேண்டும். அப்போதுதான் இலங்கைமீதான தன் பிடியைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும். இதுவே இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் GSP+வரிச்சலுகையில் அக்கறை காட்டுவது. இலங்கைக்கு இச்சலுகை கிடைப்பது கடினம் என்பது சென்ற மாதமே The Economist சஞ்சிகை மூலமாக வெளிவந்து விட்டது. அதனால் இலங்கைக்கு பணம் இறைக்க இந்தியா தயாராகி விட்டது. ஆனால் வன்னி முகாம்களில் மூன்று இலட்சம் தமிழர்கள் வதை பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கைக்குப் பணம் கொடுப்பது தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதைச் சமாளிப்பதற்கு முன்னேற்பாடாக மத்திய அமைச்சர் சிதம்பரம் ஊடாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். சிதம்பரமும் கருணாநிதியைச் சந்தித்து நாடகதிற்கான திரைக் கதையை எழுதினார்கள். இந்திய ஆளும் கூட்டணியின் பாராளமன்ற உறுப்பினர்கள் வன்னி சென்று முகாம்களைப் பார்வையிடுவதுதான் அந்த நாடகம். சாட்டுக்கு இலங்கை சில அகதிகளை மீள் குடியேற்றம் செய்யும். ஆனால் அகதிகளை தமிழ்த்தேசிய போராட்டம் மீண்டும் தலை தூக்காது என்ற உறுதி நிலை தோன்றும் வரை அடைத்து வைத்திருப்பது இந்தியப் பிராந்திய ஆதிக்கத்திற்கு உகந்தது என்றே இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் நம்புவது போலத் தெரிகிறது.
தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் வந்து சென்றவுடனேயே இந்திய துணை அமைச்சர் பிரணீத் கவுர் அவர்கள் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து இந்தியா இலங்கைக்குப் பண உதவி செய்வதாக உறுதி வழங்கி விட்டார். அவற்றில் ஒன்று யாழ்ப்பாணதில் உள்ள விளையாட்டு அரங்கை அபிவிருத்தி செய்வது. விளையாட்டரங்கு இப்போது அங்கு வாழ் மக்களின் அவசியத் தேவையல்ல. இருந்தும் அங்கு இந்திய உளவுத்துறை அபிவிருத்து செய்ய வந்த ஊழியரகள் என்ற போர்வையில் இருந்து நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று அறியப் படுகிறது. அவர்களின் முக்கிய நோக்கம் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்ற அபிப்பிராயத்தை தமிழர்களிடையே வேரூன்றச் செய்வதும் சிங்களவனுக்கு அடிமையாக இருப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு தெரிவில்லை என்பதை தமிழர்களிடை பரப்புவதும் என்று கூறப் படுகிறது.
1 comment:
"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கும் ,வறுமையால் ,
இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.
எனவே, உணவை கெட்டுப்போகும் வரை
விட்டு வைக்காமல்,
தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்
தட்டில் இடுவோமா..?"..............................
தொடருவோம் வாருங்கள்..
Post a Comment