Friday, 23 October 2009

பிரபாகரனும் இரு சோதிடர்களும்.


வருகின்ற மாதத்தில் பிரபாகரனுக்கு முக்கியமான மூன்று தினங்கள் உள்ளன. 25-ம் திகதி பிரபாகரனுக்கு எதிரான ராஜீவ் காந்தி கொலை வழக்கு சென்னை நீதிமன்றத்திற்கு மீண்டும் வருகிறது. 26-ம் திகதி அவரது பிறந்த தினம். 27-ம் திகதி விடுதலைப் புலிகளின் முக்கிய தினமான மாவிரர் தினம். இப்போது பிரித்தானியா வாழ் தமிழர்கள் பலர் அவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். அல்லது அவரது இறப்பை நம்ப மறுக்கிறார்கள். இம்முறை மாவீரர் தினத்தன்று பிரபாகரன் படத்துக்கு மாலை அணிவிக்கப் படுமா? அப்படி நடப்பதற்கான எந்த அறிகுறியும் இலண்டனில் இல்லை. அக்டோபர் 17-ம் திகதி இலண்டனில் நடந்த் ஊர்வலத்தில் புலிக் கொடிகள் பறந்தன. ஆனால் வழமையாக நடப்பது போல் பிரபாகரனின் படம் கொண்டு வரப் படவில்லை. இது ஊர்வல ஏற்ப்பாட்டாளர்கள் எடுத்த முடிவாக இருக்க வேண்டும். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை விடப் பெரிய கேள்வி அவர் இருந்தால் எப்போது வருவார். இது பற்றி இரு சோதிடர்களின் கூற்றைப் பார்ப்போம்.

ஒரு சோதிடரின் கணிப்பு. இவ்வாண்டு மே மாதம் பிரபாகரனுக்கு மூன்றாம் இடத்தில் வியாழன் இருந்தது. மூன்றிலே வியாழன் இருப்பதற்கு உதாரணமாக துரியோதனை எடுத்துக் காட்டுவார்கள் சோதிடர்கள். கடைசியில் துரியோதனன் நிலை:
எண்ணிய எண்ணமெங்கே இலக்கண குமாரனெங்கே
கர்ணனும் தேருமெங்கே பத்து அக்ரோணி சேனையெங்கே


இது போலவேதான் பிரபாகரனுக்கும்
எண்ணிய எண்ணமெங்கே சால்ஸ் அன்ரனி எங்கே
பொட்டும் புலனாய்வுத் துறையும் எங்கே
சூசையும் கடற்ப்படையுமெங்கே

என்னும் படியானது!

போரில் துரியோதனன் மாண்டது போல பிரபாகரனும் மாண்டு விட்டார். இப்படி முடித்தார் முதலாவது சோதிடர்.

இன்னொரு சோதிடர் வேறு விதமாகச் சொல்கிறார். மூன்றாம் இடத்தில் வியாழன் இருக்கும் போது இறப்பதானால் 12 வயதுக்கு மேல் எவரும் உயிர் வாழ முடியாது. துரியோதனனுக்கு நடந்தது போல் சில பிரபாகரனுக்கு நடந்தது உண்மையே. துரியோதனன் ஆயுள் பலம் முடிவடைந்த நிலையிலேயே அவன் இறந்தான். ஆனால் பிரபாகரனின் ஆயுட்பலம் வேறு. ஆயுள் காரகனாகிய சனியே அவரது இலக்கினாதிபதியுமாகிறார். அது மட்டுமல்ல அவரது சாதகத்தில் சனி உச்சம். அத்துடன் பிரபாகனின் ஆயுள்ஸ்தானாதிபதி புதன் ஆயுள்காரகன் சனியுடன் கூடி சுக்கிரன் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைந்து இருக்கிறார். அதனால் அவருக்கு திர்க்காயுசு. தசா புத்திப் படி பிரபாகரனுக்கு மே 17-ம் திகதி வியாழனுடைய அந்தரம் நடந்து கொண்டிருந்தது வியாழனும் அவருக்கு உச்சம். அதனால் மே 17-ம் திகதி அவருக்கு மரணம் சம்பவத்திருக்க வாய்ப்பே இல்லை.

மூன்றாம் வீட்டு வியாழனால் தனது படை மாண்டவுடன் துரியோதனன் நீருக்கடியில் மறைந்திருந்து சிரஞ்சீவி மந்திரத்தை உச்சரித்து மாண்ட படைகளை மீண்டெழச் செய்ய முயற்ச்சித்தான். அவனது மந்திரத்தால் போர்முனையில் விழுந்து கிடந்த சடலங்கள் சற்று அசையத் தொடங்கின. இதை உணர்ந்த கண்ணன் பாண்டவர்களை அவன் மந்திரம் உச்சாடனம் செய்யும் இடத்திற்கு அழத்துச் சென்று துரியோதனனை வெளியே வரச்செய்ய அவனுக்கு கோபம் ஊட்டும் படி போருக்கு அறை கூவல் விடுக்கும் படி வீமனைப் பணித்தான். வீமனும் அப்படியே செய்தான். துரியோதனன் வீணாக உணர்ச்சிவசப்பட்டு வெளியே வந்து சண்டையிட்டான். கண்ணன் சொன்னபடி போர் விதிகளுக்கு மாறாக அவனை பிறப்புறுப்பில் அடித்து வீமன் கொன்றான்.

இப்போது மறைந்திருக்கும் பிரபாகரனும் தொடர்ந்து மறைந்திருந்து தனது படையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அவசரப் பட்டு வரக்கூடாது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அவருக்கு ஏழரைச் சனி தொடங்க விருக்கிறது. அது அவருக்கு மரணச்சனி. அவர் பிறக்கும் போதே ஏழரைச்சனி நடந்ததால் 60 வயதிற்கு முன்னே அவருக்கு இந்த மரணச் சனி. அதில் இருந்து அவர் தப்பி பின்னர் நீண்ட ஆயுளுடனும் கீர்த்தியுடனும் வாழ்வார். ஆகவே பிரபாகரன் இன்னும் 10 ஆண்டுகள் மறைந்திருப்பதே நல்லது. இப்படி முடித்தார் இரண்டாவது சோதிடர்.

கொழும்பில் வாழ்ந்த பகுத்தறிவாளர் ஏபிரகாம் கோவூர் அவர்கள் அடிக்கடி கூறுவாராம் உங்கள் ஜாதகத்தை இரு சோதிடர்களிடம் கொடுத்துப் பலன் கேளுங்கள் அவர்கள் இருவரும் வேறு பட்ட பலன்களையே சொல்லுவார்கள். ஏபிரகாம் கோவூர் அவர்கள் பகுத்தறிவுச் சங்கத்தை ஆரப்பித்து ஒருகையில் மதுக் கிண்ணத்துடனும் ஒரு கையில் சுருட்டுடனும் ஒருவரைப் பறவைக்காவடி எடுக்க வைத்தவர். பன்றி இறைச்சி தின்றுவிட்டு ஒருவரை கதிர்காமத்தில் தீமிதிக்க வைத்தவர். கொழும்பு பாமன் கடையில் வாழ்ந்த மலையாளியான இவரது வீடு கூட 1983-ம் ஆண்டு நடந்த இனக்கொலையின் போது தீக்கிரையாக்கப் பட்டது.

4 comments:

Anonymous said...

என்னடா சொல்ல வர.... இருக்காரா இல்லையா ? பதிவு போட்டு கொழப்பறதே உன்னோட இம்சையா போச்சுடா

M Poovannan said...

ஏன் திருமாவே இன்றுவரை பிரபாகரன் சாகவில்லை திரும்ப உயிரோடு வருவார் என சொல்லிவருகிறாரே !!!

Anonymous said...

thalai is archunan not thuriyothanan like u

Anonymous said...

விங்கான த்துக்கு முன் இது தான் தேவையா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...