Wednesday 14 October 2009

இந்தியத் தூதுக் குழுவின் குட்டு வெளிப்பட்டது.


வன்னியில் உள்ள வதை முகாம்கள் தொடர்பான நெருக்கடி நாளுக்கு நாள் இலங்கை அரசிற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மேற்கு நாடுகளிலிருந்தும் மனித நேய அமைப்புக்களிடம் இருந்தும் பல அழுத்தங்கள் இலங்கைமீது அதிகரித்தே வருகின்றது. இதிலிருந்து ஒரு தற்க்காலிக நிவாரணமாவது இலங்கை அரசிற்குத் தேவைப் படுகிறது.

இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர் பிரதேசங்களை சிங்களவர்களைக் குடியேற்றிய பின்னரே அங்கு முகாம்களில் இருக்கும் மக்களை சிங்களவர்களின் கொத்தடிமைகளாக குடியேற்ற வேண்டும்.
இந்தியவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை இனி தலையெடுக்க முடியாதவாறு அழிக்கவேண்டும். எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் அழித்தொழிக்க வேண்டும். இதற்கு இன்னும் சிலமாதங்கள் வன்னி முகாம்கள் நீடிக்க வேண்டும்.
இதற்கு டெல்லியில் "ரூம்" போட்டு யோசித்தார்கள். விளைவு ஒரு தூதுக் குழு. பல கட்சிகள் கொண்ட தூதுக் குழுவாயின் அது இலங்கைக்கு சார்பாக நடக்கும் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதற்காக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அமைக்கப் பட்டது. இது நடுநிலையானது எனக் காட்ட அகப் பட்டவர்கள் கனிமொழியும் திருமாவளவனும்.

இந்தக் குழு தொடர்பாக கலைஞர் தெரிவித்தது: ''இது அரசு சார்பாகச் செல்லும் குழுவல்ல... தி.மு.க. கூட்டணியின் சார்பாக சென் றிருக்கும் குழு. அக்கறையிருந்தால் எதிர்க்கட்சி எம்.பி-க்களும் செல்லலாம்!''

ஆனால் இந்தக் குழுவின் மீது பல தரப் பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றன:
  • ஜூனியர் விகடன்: மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள் என திருமண விழாவுக்கு வருப வர்களைப் போல தமிழக எம்.பி-க்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து அழைத்தது சிங்கள அரசு. 'எங்கள் மக்கள் துக்கத்தில் தவிக்கும் நிலையில் ஏன் இத்தனை ஆடம்பர வரவேற்பு?' எனக் கேட்டு தமிழக எம்.பி-க்கள் அதனைத் தவிர்த்திருக்கலாம். அவர்களோ புன்முறுவல் பூத்தபடி... சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந் தார்கள்.
  • உதயன்(யாழ்ப்பாணப் பத்திரிகை):பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா? இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள் மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே! "இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார்.


கொழும்பில் இருந்து வரும் செய்திகள்:
  • சந்திப்பின்போது இடம்பெயர்ந்தோர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. வடக்கின் நிலைமையை பார்வையிடுவதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இதன்போது இந்திய எம்.பி. க்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியவை என்றும் இந்திய எம்.பி. க்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக கூறினார்.
  • இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயத்துக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்து "இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும்" இந்தியத் தூதுக் குழுவின் குட்டை உடைத்துவிட்டது. இதற்க்காகத் தானே இலங்கை ஜனாதிபதியின் "அழைப்பின் பேரில்" இந்தக் குழு இலங்கை சென்றது.

கனிமொழி இதுவரை பகிரங்கக் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. தோழர் திருமா மக்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் என்றார். தங்கபாலுவும் வந்தாரா? சுதர்சன நாச்சியப்பன் "மொக்கைத்தனமாக" முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கிறது என்றார். இலங்கையில் மெனிக் பாம் மட்டும் முகாம் என்பது மாதிரி இலங்கையும் இந்தத் தூதுக் குழுவும் நடந்து கொள்கின்றன.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தூதுக் குழுவைச் சந்தித்ததின் காணொளியைக் காண இங்கு சொடுக்கவும்: Daily Mirror

3 comments:

Anonymous said...

இலங்கையில் கோமாளிகள் ( நன்றி - சரத் பொன்சேகா) சொன்னது ---"போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக நியமங்களுக்கு அமைவாகவே அமைக்கப்பட்டுள்ள. அங்கு பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன" என சிறிலங்கா அரசுக்கு சான்றிதழ் வழங்கியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்,

Anonymous said...

இது காட்டிக்கொடுத்தவர்களுக்கும், கூட்டிக்கொடுத்தவர்களுக்குமான சந்திப்பு. இதனால் ஒரு பயனும் இல்லை. கலைஞர் செத்தால் இதற்க்கு விடிவு உண்டு.

Anonymous said...

இந்தியத்தமிழரால் எந்த நியாயமும்
பெற்றுத்தரமுடியாது ஏன் எனில்
இந்தியத்தமிழர் தன் மானம் இல்லாத
அடிமைகள்.பணத்திற்கும் பெண்ணுக்
கும் சோரம் போகும் பேடிகள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...