ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்திய உளவாளிகள் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பலத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாண நகரில் உள்ள விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து பல உளவாளிகள் ஊருடுவியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களின் பணி அங்குள்ள மக்களின் மன நிலையை அறிந்து அதை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதுதான் என்று அறியப் படுகிறது. இது போல இலங்கையின் பல பாகங்களிலும் இந்திய உளவாளிகள் செயற்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம் பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் வானொலி தொலைக் காட்சி சேவைகளின் நேயர் நேரங்களில் இதுவரை பங்கு பற்றி தகாத வார்த்தைப் பிரயோகம் வீண் வாதம் விடுதலை புலிகள்மீது வசை பாடுதல் போன்றவற்றை செய்து அவற்றைக் குழப்பி வந்த இந்திய உளவாளிகள் இப்போது தாம் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல அமைதியாகக் கதைத்து தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பரப்புரை செய்கின்றனர். அது மட்டுமல்ல தமிழர்கள் இன்றிருக்கும் நிலையில் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மூன்று இலட்சம் உறவுகள் முகாம்களில் வதை படும் போது உணர்வில்லாதவர்கள்தான் அமைதியாக் இருப்பர்.
இதேவேளை தமிழ்நாட்டில் சீமானின் பரப்புரைகளை தடுக்க அவரை கைது செய்தல் அல்லது திருமாவளவன் மூலமாக இன்னோரு ஈழ் ஆதரவு பிரச்சாரத்தைத் தொடக்கி சீமானின் பரப்புரைகளை முறியடிப்பது போன்ற சதிகளை இந்திய உளவுப் பிரிவு தொடங்கலாம். அல்லது கலைஞரே நேரடியாக இன்னொரு நாடகமாடலாம்.
இந்திய உளவுத்துறை தமிழர்களின் மனங்கைளை மாற்ற முயன்று வரும் வேளையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வன்னி வதை முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றுவது உடனடியாகச் சாத்தியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதற்கு இலங்கை அரசு கூறிய சாட்டையே அவரும் கூறுகிறார். கண்ணிவெடி அகற்றுவதால் தாமதமாம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் தோன்றி சாட்சியமளித்த International Crisis Groupஐச் சார்ந்தவர்கள் இலங்கியில் மக்கள் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைத்திருப்பது இலங்கைச் சட்டத்திற்கும் உலகச் சட்டத்திற்கும் முரணானது என்பதை நிரூபித்துள்ளனர். அதுமட்டுமல்ல கண்ணிவெடி அகற்றுதல் இல்லாமலே மீள்குடியேற்றத்திற்கு சாத்தியம் உண்டேன்றும் சுட்டிக் காட்டியுள்ளர். சட்டமே படிக்காத ஒரு சாதாரண மனிதன் கூட ஒருவரை நீதிமன்றில் நிறுத்தாமல் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைத்திருப்பது குற்றம் என்பதை அறிவான். அப்படியிருக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு வக்காலத்து வாங்குவது இந்தியாவின் தமிழின அழிப்புப் போரில் இந்தியாவிற்கு இலங்கை உதவியது என்ற உண்மைக்கு வலுவூட்டுகிறது.
இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதி இல்லையா?
அல்லது
இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு எதிரி இல்லையா?
இந்தியா உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களே முடிவு செய்யுங்கள்!
4 comments:
இன்று நேற்றல்ல இந்தியா ஈழத்தில் தலையிட்ட நாளிலிருந்தே தமிழரை ஏமாற்றி வஞ்சித்தே வந்துள்ளது. இந்தியா இருக்கும வரை எமக்கு அச்சமில்லை என்று கனவு கண்டோம். கொலைவெறி சிங்களவன் ஒரளவுக்காவது தமிழக அரசியல் வாதிகளுக்காக தனது கொலை வெறித்தனங்களை வெளியெ தெரியாத படி புரிந்தான். ஆனால் இன்று அதே தமிழக அரசியல்வாதிகளின் ஆசியோடு ஒட்டு மொத்த தமிழனையும் அழித்து அகதியாக்கி இன்னும் அழித்துக் கொண்டிருக்கின்றான்.அதுவும் நாம மலைபோல நம்பிய தமிழக அரசியல வாதிகளின் துணையுடன். இனியும் ஈழத்தமிழனே இந்தியாவையோ தமிழக அரசியல் அசிங்கங்களையொ நம்பினால் உன்னை கடவுள் கூட காப்பற்ற வரமாட்டான் இனி நாம் இந்தியாவிற்கு யார் எதிரியோ அவர்களுடன் கைகோர்ப்பதே உசிதம். இந்தியா அன்றும் இன்றும் இனியும் எமக்கு எதிரியாகவே செயற்படும் என்பதனை தெள்ளத் தெளிவாக நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள் ஈழத் தமிழர்கள்.
ஜனா

அரை லூசு பூல் தர்மா பொத்திகிட்டு போடா
Post a Comment