
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தகச் சலுகையான GSP+ ரத்துச் செய்யப் படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் நடப்பவற்றைப் பார்த்தால் இலங்கை அதிபர் ராஜபக்சே அமைத்துள்ள இணைத்தலைமை அமைச்சர்கள் குழு நேர்வழியில் தமது நிலைமையை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு விளக்காமல் வேறு வழிகளைக் கையாள்கிறது போலிருக்கிறது. பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகை இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலை உயரும் என்று தெரிவித்துள்ளது. பின்னர் பிரித்தானிய வரத்தகர்களின் அமைப்பு ஒன்றும் இலங்கைகான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.
Marks & Spencer, Tesco, Next ஆகிய பிரபல வர்த்தக நிறுவனங்கள் தமது ஆடைகளை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இவை இலங்கையை சுரண்டும் வேலையை முறையாகவே செய்கின்றன. இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் மிக மிகக் குறைந்த இலாபத்துடனேயே தமது ஏற்றுமதிகளைச் செய்கின்றன இந்த GSP+ வர்த்தகச் சலுகை நிறுத்தப் பட்டால் இவ் ஆடை உற்பத்தி நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் போய் விடும். ஒன்றில் Marks & Spencer, Tesco, Next போன்றவை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் அல்லது தமது இறக்குமதியை பங்களா தேசம் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் GSP+ வர்த்தகச் சலுகையை இலங்கையின் மனித உரிமைகளுடனும் முகாம்களில் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களுடனும் தொடர்பு படுத்திப் பார்க்கிறது. ரைம்ஸ் பத்திரிகையின் தகவலின் படி இந்த GSP+ வர்த்தகச் சலுகை நீக்கப் பட்டால் நேரடியாகவும் அதனுடன் தொடர்பு பட்டதாகவும் இருக்கும் 250,000 இலங்கையர் வேலை இழப்பர் என்று தெரிவிக்கப் படுகிறது. குடும்பங்களோடு தொடர்பு படுத்தி கணக்குப்பார்த்தால் இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் பாதிக்கப் படுவார்களாம்.
இந்த வியாழக்கிழமைக்குள் இலங்கை தனது பதிலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்க வேண்டும். இலங்கை பணிந்து போகும் நிலையில் இல்லை. ஆனால் இதில் சம்பந்தப் பட்ட வர்த்தக நிறுவனங்களின் பிரச்சாரத்தில்(lobbying) நம்பிக்கை வைத்துள்ளது போல் தெரிகிறது. GSP+ வர்த்தகச் சலுகை சம்பந்தமாக அடுத்தமாதம் ஐரோப்பிய ஒன்றியம் முடிவை எடுக்கும். அது அடுத்த வருட நடுப் பகுதியில் இருந்து அமூலுக்கு வரும்.
No comments:
Post a Comment