Sunday, 13 September 2009
வீராப்புப் பேசிய இலங்கை வீழ்ந்து வணங்கப் போகிறதா?
GSP+ எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய வர்த்தகச் சலுகையை இரத்துச் செய்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். ஒரு இலட்சம் பேர்வரை இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகை இரத்தை தவிர்ப்பதற்கு அவர் "இணைத் தலைமை அமைச்சர் குழு" ஒன்றை உருவாக்கியுள்ளார். ஏற்றிமதி மற்றும் பன்னாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இடர் முகாமைத்துறை மற்றும் மனித உரிமைத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட, வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லாகம ஆகிய நான்கு அமைச்சர்களும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
GSP+ என்பது என்ன என்று அறிய இங்கு சொடுக்கவும்
ஏற்றுமதி அபிவிருத்தித் துறை அமைச்சின் செயலாளர் ரணுகே என்பவர் ராயட்டருக்கு வழங்கிய செவ்வியில் இலங்கைக்கு வரிச்சலுகை கிடைப்பது சந்தேகம் என்று கூறியது இலங்கை அதிபர் ராஜபக்சேயை ஆத்திரப் படுத்தியுள்ளது என்று அறியப் படுகிறது.
சென்ற வாரம் கா(ர்)டியன் பத்திரிகைக்கு இலங்கையின் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி ஏற்கவிருப்பவருமான பாலித கொஹென்ன ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாகச் சாடி பேட்டியளித்திருந்தார். பாலித மேலும் தெரிவிக்கையில் இப்போது பொருளாதார வல்லமை மேற்கிலிருந்து கிழக்கிறகு மாறிவிட்டது என்று கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையால் ஏற்படும் இழப்பீட்டை கிழக்குலக நாடுகளுடன் ஏற்படுத்தும் வர்த்தக உறவால் ஈடு செய்ய முடியும் என்று வீராப்புப் பேசினார். அவருக்கு பிரித்தானிய நுழைவு அனுமதி கிடைக்காத ஆத்திரத்தையும் சேர்த்து அவர் தனது பேட்டியில் ஐரோப்பிய ஒன்றியத்தை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கட்டினார். மஹிந்த ராஜபக்சேயும் தனது பொருளாதாரக் கொள்கை மேற்கு நாடுகளைச் சார்ந்ததாக இருக்காது என்று பலதடவை கூறியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சே ஐரோப்பிய ஒன்றியத்தின் முவர் அடங்கிய நிபுணர் குழு இலங்கக்கு GSP+ வர்த்தகச் சலுகை வழங்கக் கூடாது என்று வழங்கிய அறிக்கைக்கு பதிலளிக்கவும் மறுதலிக்கவும் இந்த "இணைத் தலைமை அமைச்சர் குழு" வை அமைத்துள்ளார்.
தன்னால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இழப்பீட்டை ஈடு செய்ய முடியுமென்றால் இலங்கைக்கு ஏன் இந்த "இணைத் தலைமை அமைச்சர் குழு" ?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
India will give more than enough money to Rajapakse as long as he is against Tamils...
There will be competitin between India and China to help srilanka....
Post a Comment