
தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரத்தை ஒரு புரட்சி படைப்பு என்று கூறுவாரகள். தமிழில் சிலப்பதிகாரத்திற்கு முந்திய படைப்புக்கள் எல்லாம் மன்னர்களைப் பற்றியது. ஆனால் சிலப்பதிகாரம் ஒரு குடிமகன் ஆகிய கோவலனைப் பற்றியது. அதனால் தமிழில் தோன்றிய முதல் குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம். ஆனால் கோவலன் மிகப் பெரிய தனவந்தன். ஒரு சாதாரணகுடிமகன் அல்ல. சிலப்பதிகாரத்திற்கு பிறகு தோன்றிய குடிமக்கள் பற்றிய படைப்புக்கள் யாவும் செல்வந்தர்கள் சம்பந்தமாகவே இருந்தது. முதலில் ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வை மையப்படுத்தி படைக்கப் பட்ட தமிழ்ப் படைப்பு வேலைக்காரி என்ற திரைப்படமாகும். இதற்கான கதை வசனத்தை எழுதியவர் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள்.
இன்று 16-06-2009 அறிஞர் அண்ணாத்துரை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1956இல் நடந்த இனக் கலவரத்தின் போது இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோது அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் சொன்னது: எமது கையில் அதிகாரம் இல்லை. நாம் இருக்கும் நிலையில் எம்மால் எதுவும் செய்ய முடியாது. எம்மால் இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்க மட்டுமே முடியும். இது இன்றும் உண்மையாகும். தமிழ்நாட்டில் தமிழர்களின் கையில் அதிகாரம் இல்லை. அவர்கள் அவர்களால் ஈழத் தமிழர்களுக்காக கூட்டங்கள் போடவும் உண்ணாவிரதம் இருக்கவும் தான் முடியும். ஆனால் அண்ணா அன்று தம்மால் எதையும் செய்யமுடியாது என்று உண்மையைச் சொன்னார்.
No comments:
Post a Comment