Wednesday, 2 September 2009

கணனி மொழிக் காதல்


பகற்குறியும் இரவுக்குறியும்
காட்டி வந்த நாயகன்
நகக்குறியும் பற்குறியும்
இட்டுச் சென்றான்
இது கன்னித் தமிழில்
அகத்திணைக் காதல்

கணனித் தமிழில்
வலயவுலகில்
ஆறாம் திணைக் காதல்
எப்படித்தானிருக்கும்

தட்டச்சு நீயாக தடவும் விரல் நானாக
சொடுக்குக்கு ஏங்கும் பணிப்பட்டை(task bar)
போலத் தவிக்குது என்மனம்.

மென்பொருள் நீயன்றோ(software)
பயனர் நானன்றோ
கிருமிகள் ஏன் இங்கே.

உன் இதயத்தில் எனைக்காண
தேவை ஒரு தேடு பொறி(search engine)

என் வன்பொருளின்(hardware)
ஒவ்வொரு எண்ணுண்மியும்(bytes)
வாடுது உனை எண்ணி

உன் மனக்கதவில்
என் இந்த மெல்லினப் பூட்டு(caps lock)

தரவிறக்கம் செய்யாயோ(download)
உன் இதயத்துள் என்னை

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...