ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் ஓரிருதொலை பேசி அழைப்புக்கள் விடுவதோ அல்லது கூட்டறிக்கை விடுவதோ இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என இலங்கையின் மாற்றுக் கொள்கைக்கான் நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் அண்மையில் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு தான் இலங்கையில் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானோர் பற்றிய சர்வதேசத்தின் கரிசனையை ஒரு கடிதம் அனுப்பித் தெரிவித்துள்ளதாக உலகின் மிகப் பயங்கரமான கொரிய நாட்டவர் என்று வர்ணிக்கப்படும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் பத்திரிகையாளர் மாநாட்டில் நேற்றுப் பெருமையடித்துக் கொண்டார். பல்லாயிரக் கணக்கான அப்பாவைத் தமிழர்களின் கொலையை தடுத்திருக்க வேண்டிய இவர் இப்போது இப்படிக் கூறுகிறார். இப்பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு தயார் செய்து வைத்திருந்த அறிக்கையை பான் கீமூன் வாசித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். எந்தவிதமான பாத்திரிகையாளர் கேள்விகளுக்கும் அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து வந்த இவரது உதவியாளரும் இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு அனுமதி மறுத்தார். ஏன் இந்த மூடி மறைப்பு?
கடிதம் எழுதவும் தந்தி அடிக்கவும் கலைஞரால் மட்டும் முடியுமா?
இதேவேளை இலங்கை வந்துள்ள ஐ.நா.சபையின் விசேட பிரதிநிதி லின் பாஸ்கோ சில உன்னதமான கண்டு பிடிப்புகளை செய்துள்ளார்:
- வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலையிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப்படுகின்றனர்.
- முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை இயன்றவரை விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வழிசெய்ய வேண்டும்.
- முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதொரு உணர்வை தரமாட்டாது.
No comments:
Post a Comment