இலங்கை அரசை அதிர்ச்சியளிக்க வைத்ததாம் அவர்களிடம் இருந்த நவீன சீன ஆயுதங்கள். இலங்கையின் நட்புறவு நாடான சீன விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதா? இலங்கைக்கு என்றும் நல்ல நண்பனாக இருக்கும் நாடு அப்படிச் செய்யவில்லை. ஆயுத வர்த்தகர்களே விடுதலைப் புலிகளுக்கு அந்த ஆயுதங்களை விற்றனர். இலங்கைப் போரில் பெரும் பொருளீட்டியவர்கள் ஆயுத வியாபாரிகளே. இவர்கள் இப்போது புதுக் கதை கட்டி விட்டுள்ளனர்.
http://www.strategypage.com என்ற இணையத்தளம் ஒரு புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளது:
இலங்கைப் படையினருடனான இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்கள் தமது இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பார்கள் என்றும், இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து அந்த இணையத்தளம் தெரிவிப்பது: இலங்கை இராணுவத்துடனான இறுதிக் கட்ட யுத்தத்தின்போது சுமார் 30 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஆயுதமற்ற புலிகள் ஆவர். ஆனால், மிகவும் ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்குபவர்கள். அவர்கள் தற்போது புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு முயற்சித்து வருகின்றார்கள்.
இவற்றை மட்டுமே பிரசுரித்த பல தமிழ் இணையத்தளங்கள் அந்த http://www.strategypage.com என்றஇணையத்தளத்தை சரியாக வாசிக்காமல் dailymirror இணையத்தளத்தில் இது தொடர்பாக வந்த செய்தியை மட்டுமே வாசித்துவிட்டு எழுதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் பலமுடன் இருக்கிறார்கள் என்று காட்டினால் மட்டும்போதும். துள்ளிக் குதிப்பார்கள். அந்த இணையத்தளம் ஏன் இப்படி ஒரு தகவலை வெளியிடுகிறது என்று பார்க்கத் தவறிவிட்டனர்.
இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகள் எப்படிச் சுற்றி வளைக்கப் பட்டனர் என்பதை மேலுள்ள படம் காட்டுகிறது. அதுவும் டெய்லிமிறர் பத்திரிகையிலேயே வெளிவிடப்பட்டது. அப்படத்தில் இல்லாததும் உண்டு. பக்கத்து நாட்டுக் கடற்படையிரனர் நீர்மூழ்கிக்கப்பல் உட்பட அணிவகுத்து நின்றது மேலுள்ள படத்தில் இல்லை. தாக்குதல் நடத்தக் கூடிய முப்பதினாயிரம் புலிகள் இருந்திருந்தால் அவர்கள் வலிந்த தாக்குதல் செய்திருப்பர். முப்பதினாயிரம் விடுதலைப் புலிகள் இருந்தனர் என்பது அப்பட்டமான பொய்.
http://www.strategypage.com இன் செய்தியின் விளைவிகள் என்ன?
- முப்பதினாயிரம் தமிழர்களைக் கொல்லலாம்.
- முப்பதினாயிரம் தமிழர்களை புலிகள் என ஒப்பு வாக்கு மூலம் கொடுக்கச் செய்து மரண தண்டனை வழங்கலாம்.
- வன்னி வதை முகாம்களில் இருப்பவர்களில் முப்பதினாயிரம் பேரையும் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லி அவர்களின் விடுதலையை மேலும் தாமதப் படுத்தலாம்.
- பல்லாயிரம் தமிழர்களை சந்தேக நபர்கள் எனச் சொல்லி வடக்குக் கிழக்கில் கைது செய்து காலவரையின்றிச் சிறையில் அடைக்கலாம்.
http://www.strategypage.com இன்னும் என்ன சொல்கிறது?
The government is negotiating with Pathmanathan to find out where the remaining funds are, and what shape the offshore LTTE organization is in.
இலங்கை அரசு பத்மநாதனுடன் பேச்சுவார்த்தை நடாத்துகிறதாம்!!!! கடத்திக் கொண்டுவந்து வன்முறை மூலம் தகவல்களை கறப்பது அந்த இணையத் தளத்தைப் பொறுத்தவரை பேச்சு வார்த்தை.
Meanwhile, some atrocities have taken place, but often against Sri Lankans who don't get along with the police. Over more than two decades of terrorism and violence, the national police have acquired an attitude that they are above the law.
இலங்கையில் சில கொடூரங்கள் நடந்தனவாம். 1956இல் குழந்தைகளை கொதி தாரில் போட்டதிலிருந்து நேற்று வன்னி முகாமில் இறந்த குழந்தைகள் வரை எத்தனை குழந்தைகள் இறந்தன என்று கணக்குண்டா? இவை சில கொடூரங்களா? இந்த இணையத்தளம் ஏன் இப்படிப் பொய் கூறுகிறது.
இலங்கையில் நடக்கும் மனித உரிமைமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐரோப்பியர்களை அந்த இணையத்தளம் கண்டித்துள்ளது. அதுவே அதன் தலைப்பாகவும் அமைந்துள்ளது. European Racists Close In என்பதுதான் கட்டுரைத் தலைப்பு. ஒரு இனக்கொலைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை இந்த இணையத்தளம் ஏன் இனவாதிகள் என குற்றம் சாட்டுகிறது.
இலங்கையில் இந்தமாதத்தில் கண்டெடுக்கப் பட்ட தற்கொலைதாரிகளின் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.
வன்னிமுகாமில் உள்ள மக்களின் அவலம் பற்றியோ அல்லது அவர்கள் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருப்பது பற்றியோ குறிப்பிடாத http://www.strategypage.com இணையத்தளம் அவர்கள் இப்போதைக்கு விடுவிக்கப் படமாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.
http://www.strategypage.com இப்படிச் சொல்வது ஏன்?
மொத்தத்தில் இந்தக் கட்டுரை எழுதியவர் இலங்கைக்கு வக்காலத்து வாங்குகிறார் என்பதும் இலங்கையில் இன்னும் விடுதலைப் புலிகளால் பேராபத்து உண்டு என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். அதாவது இலங்கை இன்னும் ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் கட்டுரையின் உள் அர்த்தம் போலத்தான் தெரிகிறது. ஆயுத வியாபாரிகள் இப்படியும் சதி செய்வார்களா?
4 comments:
Good you have seen the article in its correct perspectives
எல்லாமே காசுக்குத் தானா?
எத்தனை இலட்சம் உயிர்களின் மேல் பணம் சம்பாதிக்கிறார்கள்...
நல்ல தரமான பதிவு...
Post a Comment