
தம்மால் "கொல்லப் பட்ட" பிரபாகரனின் உடலில் இருந்த செய்மதி தொலைபேசியில் இருந்த தடயங்களை வைத்தே முப்பது வருடங்களாக தமது கண்ணில் மண்ணத் தூவிய செ பத்மநாதனைக் கைது செய்ததாக இலங்கை தெரிவித்துள்ளது.
மூன்று பிரிவினர் மூன்று நாடுகளில் தேடுதல்
இலங்கை அரசின் மூன்று குழுக்கள் மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பத்மநாதனைப் பிடிக்க அல்லது கொல்ல அனுப்பப் பட்டார்களாம். இலங்கைக்கு கொண்டுவருவதிலும் பார்க்க அவரை கண்ட இடத்தில் கொல்வதையே இலங்கை விரும்பியதாம். ஆனால் சம்பந்தப் பட்ட நாடுகளின் உளவுத் துறையினர் இதை விரும்பாததால் அவரை உயிருடன் இலங்கை கொண்டுவரும்படி நேர்ந்ததாம். இவற்றை ராயட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்த பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை இராணுவ அதிகாரிகள் செ பத்மநாதன் அடிக்கடி தனது தொலை பேசியையும் இருப்பிடத்தையும் மாற்றிக் கொண்டிருப்பவர் என்றும் கூறியுள்ளனர். இங்கு ஒரு முரண்பாடு: அப்படிப் பட்டவரை எப்படிப் பிரபாகரனின் தொலை பேசியில் உள்ள தடயங்களை வைத்துப் பிடித்தனர். இதுபற்றிய தொழில் நுட்ப அறிவு உள்ளவர்களுக்குத்தான் வெளிச்சம். இது இவ்வாறிருக்க தாய்லாந்தைத் தொடர்ந்து மலேசியாவும் பத்மநாதன் தமது நாட்டில் கைது செய்யப் படவில்லை என்று அறிவித்துள்ளது.
இலங்கைச் சட்டப் படியும் சர்வதேச நியமங்களுக்கு
அமையவும் விசாரிக்கப்படுவாராம்.
இதனிடையில் "கைது" செய்யப் பட்ட பத்மநாதன் இலங்கைச் சட்டப் படியும் சர்வதேச நியமங்களுக்கு அமையவும் விசாரிக்கப் படுவார் என்கிறது இலங்கை அரசு. குட்டிமணியும் தங்கத்துரையும் எப்படி விசாரிக்கப் பட்டனர் தண்டிக்கப் பட்டனர் என்பதை நாம் அறிவேம்.
தொடருமாம் தேடல்
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் காஸ்ரோ போன்ற மற்ற முக்கிய தலைகளை தேடி அழிக்கும் அல்லது பிடிக்கும் பணி தொடருமாம்.
=============================================================
1 comment:
இதில் கூடச் சேர்ந்து இந்த்யா போன்ற நாடுகள் ஆடுகின்றனவா என்பது தெளிவாக வேண்டும்.
இலங்கை அரசுதான் பயங்கரவாதக் கடத்தல்,கொலை,கற்பழிப்புக் கும்பல் என்பதை உலகம் உணரவைப்போம்.
Post a Comment