இப்படத்தில் சொடுக்கவும் -
Click on the above picture to enlarge.
இலங்கை அரசால் பெயர் குறிப்பிடப் படாத நாடொன்றில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டவர் பத்மநாதன் தான் என்பது இப்போது உறுதி செய்யப் பட்டுள்ளது.
கைதா? கடத்தலா?
பத்மநாதனைச் சார்ந்தோர் அவர் கடத்தப் பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். கைது என்பது குற்றப் பத்திரிகை சமர்பித்து நீதிமன்ற ஆணையின் படி செய்யப் படுவது. அப்படி ஏதும் நடக்காததால் இது கடத்தலே.
எப்படி மாட்டியிருப்பார் பத்மநாதன்?
பல ஆண்டுகளாக சர்வதேசக் காவற்துறையால் கைது செய்ய முடியதவரை எப்படி பிடிக்க முடிந்தது. இச் சதியில் இன்னும் ஒரு நாடு நிச்சயம் சம்பத்தப் பட்டுள்ளது. அது தாய்லாந்து அல்ல என்பது உறுதி செய்யப் பட்டுளது. விடுதலைப்புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் அல்லது கே.பி. யின் கைது தொடர்பாக வெளியான செய்தி குறித்து விபரங்களை வழங்குமாறு தாய்லாந்தின் பாதுகாப்பு முகவர் அமைப்புகளுக்கு அந்நாட்டுப் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவா நேற்று வெள்ளிக்கிழமை உத்தவிட்டார். தனது நாட்டுக் குடிமகனின் கைதை அவர் சர்வதேச காவற் துறையால் வேண்டப் பட்டவராக இருந்தும் பிரதமர் அக்கறை எடுத்திருப்பது தாய்லாந்து இந்தியாவைப் போல் ஒரு மானம் கொட்ட நாடு அல்ல என்பதைக் காட்டுகிறது. இந்தியக் குடிமக்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப் படுவதை இங்கு கவனிக்கவும். தாய்லாந்து இதில் சம்பந்தப் படாததால் சந்தேகம் மலேசியாவின் மீது தான் ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் பத்மநாதன் குற்றமிழைத்தவர் அல்ல. மலேசியாவோ அல்லது வேறு ஒரு நாடோ தன் மண்ணிற்கு வந்த ஒரு வெளிநாட்டவரை அவர் விருப்பத்திற்கு மாறாக இன்னோரு நாட்டினர் வந்து கடத்திச் செல்ல அனுமதிப் பது சட்ட விரோதம். இந்தச் சட்டவிரோதச் செயலுக்கு சம்பந்தப் பட்ட நாட்டை தூண்டும் வலு இலங்கைக்கு இல்லை இலங்கையுடன் இன்னொரு நாடு அல்லது நாடுகள் இதில் சம்பந்தப் பட்டிருக்கவேண்டும். கடைசியாக பத்மநாதனைச் சந்தித்த வர்மன் அந்நாடு மலேசியாவே என்று உறுதி செய்துள்ளார். அவர் யாரையோ சந்திக்கச் சென்றவிடத்திலேயே கடத்தப் பட்டுள்ளார். அவரை யாரோ பேச்சு வார்த்தைக்கு வரச்சொல்லி அழைத்தே கடத்தியுள்ளனர். இலங்கை அப்படி அழைப்பு விடுத்தால் அதை பத்மநாதன் இலேசில் நம்பியிருக்க மாட்டார். அண்மைக்காலமாக பத்மநாதன் இந்தியாவின் ஆதரவை தமிழர்களுக்கு வேண்டி அறிக்கைகள் விட்டுள்ளார். அவரை பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்த நாடு பெரும்பாலும் இந்தியாவாகத்தான் இருக்க வேண்டும்.
பத்மநாதனுக்கு என்ன நடக்கும்?
பத்மநாதன் நீதிமன்றில் நிறுத்தப் பட்டால் அவர் கடத்தலில் சம்பந்தப் பட்ட மூன்றாம் நாட்டின் சதியும் அம்பலமாகும். அது அந்த நாட்டிற்கு எதிராக சட்டச் சிக்கலை உருவாக்கலாம். இப்போதைக்கு இலங்கையில் அவசிய தேவை பத்மநாதனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் நிதிக் கட்டமைப்பை கைப்பற்றுவது அல்லது சிதைப்பதாகவே இருக்கும். அதற்கு அவருக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதாலே சாத்தியம். நீதிமன்றில் சமர்ப்பித்தால் இவ் வன்முறைகள் வெளிவரும். பத்மநாதனை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான் சாத்தியங்கள் குறைவு. இவரின் மீது இலங்கைப் படை அதிகாரிகளுக்கு இருக்கும் ஆத்திரம் சொல்லில் அடங்காது. ஆகையால் அவருக்கு குட்டிமணி, தங்கத்துரை போன்றோருக்கு ஏற்பட்ட முடிவே பத்மநாதனுக்கும் நடக்கும்.
இந்தியாவிடம் பத்மநாதனக் கையளிக்க இலங்கை தயார் என்று கூறியுள்ளது ஆனால் இந்திய வெளியுறவுத் துறை இதுவரை பத்மநாதன் கைது தொடர்பாக எதுவும் தெரிவித்ததாக தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
4 comments:
porambokku naaye, unakku india maanam ketta naadaa.
ungalukku idhuvum vendum innamum vendum.
If a country do not care if its citizens were killed by foreigners, that country is a shameless dirty dog! dog!! dog!!! DOG!!!!
இந்தியா கைகொடுக்கும் என்ற நம்பிக்கையை ஜீன் 13 ல் நம்பிய ஒருவர் அதற்க்குமுன்பு மே மாதமும் அதே நம்பிக்கையோடு இருந்திருக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்
நிச்சயமாக கே பி கைதில் அமைப்பில் இருந்துவந்த யாரேனும் ஒருவருக்கும் சம்பந்தமிருக்கிறது யுத்தகளத்திலும் இதேமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது தொடர்ந்து இப்போதும் அது நடந்திருக்கிறது
நிச்சயம் இது மிக லேசில் அவிழ்க்கமுடியாத முடிச்சல்ல
கே பி யிடமிருந்து வளமையான கணக்குமாற்றம் சிலதினங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கவேண்டும் அதுதான் இதில் முக்கியபுள்ளி.
முக்கினாலும் செலவராசாவிடம் விடயத்தை வாங்கினாலும் கைப்பற்றப்படமுடியாத, முடக்கமுடியாத நீர்மநிலைக்கு அந்த இயக்கத்தின் வளம் சென்றாகிவிட்டது
பணத்தையும் தற்காலிக தலைமையையும் புதைப்பதிலிருந்து புதிய களம் தொடங்குகிறது
சுதந்திரம் அதன் எதிர் நிலையிலிருந்துதான் வீரியம் கொள்கிறது
Mr True Indian, றாஜிவ் காந்தி சிங்களவனால் எவ்வித காரணமுமின்றி துப்பாக்கியால் ஓங்கியறைந்த போது என்ன செய்தீர்கள்? அவன் அடித்தது றாஜிவ் காந்தி என்பதாலல்ல, இந்திய பிரதமர் என்பதாலேயே. பதவியுயர்வு பெற்று அவன் சுகபோகம் அனுபவிக்கும் போது தூங்கி விட்டு இப்போ என்ன வீராப்பு? உன் இந்தியா மானங்கெட்டதில்லையென்றால் நெஞ்சை நிமிர்த்தி எம்முடன் நேரில் போராடியிருக்கலாமே? நெஞ்சை நிமிர்த்தி மாண்டிருப்போம். இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கைக்கொண்ட அதே பேடித்தனத்தை தானே இங்கும் கைக்கொண்டார்கள்? எவ்வளவு தான் நீ இந்தியன் என்று சொன்னாலும் இராமாயணத்தில் ஆரியரால் கூறப்பட்ட, கூலிக்கு மாரடிக்கும் தென்னிந்திய வானரக்கூட்டம் தான் நீ என்பதை மறக்காதே.
Post a Comment