![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_-hgbaHmcfRS3F9Eo7eaQSQrIDDTU0NnVeq-_21QkYWbqM9gKNaeeKP-7bScIoTUYw8hR4EpOr2Gc2HPvmmU1n7_71X1FRJdcSzx9p2HODbewJrepivo9gisLaXATHBEuyylp1cA83He/s320/bala.jpg)
விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்களுக்கு சிறுநீரகம் பாதிப்படந்ததுண்டு. தண்ணீரில்லாத காடுகளில் வாழ்க்கையின் இளம்பராயத்தை கழித்த படியால் இது ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரின் சிறுநீரகமும் பாதிக்கப் பட்டது. போதாக் குறைக்கு அவருக்கு நீரழிவு நோய் வேறு.
1998இல் சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசால் ஏ-9 நெடுஞ்சாலையைத் திறப்பதற்கான ஜயசிக்குரு போர் நடந்துகொண்டிருந்த வேளை அண்டன் பாலசிங்கத்திற்கு சிறுநீரக மாற்று சிகிச்சை உடனடியாக செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு சிறுநீரகம் தானம் வழங்க பல போராளிகள் முன் வந்தனர். ஆனால் வெளிநாடொன்றிற்கு அண்டன் பாலசிங்கத்தையும் சிறுநீரக கொடையாளியையும் பத்திரமாக அனுப்ப வேண்டும். மோசமான போர் நடந்து கொண்டிருந்தது. பத்திரமாகச் சேர்ப்பதற்கு அனுமதி வேண்டி செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக புலிகள் இலங்கை அரசைத் தொடர்பு கொண்டனர். இலங்கை அரசு பல நிபந்தனைகளை விதித்தது. ஏ-9 நெடுஞ்சாலையில் இருந்தும் பல முக்கிய நிலைகளில் இருந்தும் புலிகள் வெளியேற வேண்டும் என்றும் பலப் பல நிபந்தனைகளை சந்திரிகாவின் அரசு விதித்தது. இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பல பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது. சந்திரிக்க அரசு மசியவில்லை. பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகள்சந்திரிகா அரசிற்கு தெரிவித்தனர் "நாளை அண்டன் பாலசிங்கம் இலண்டனில் நிற்ப்பார்" என்று. அதிர்ந்தது இலங்கை அரசு. சொன்ன படியே நடந்தது. அண்டன் பாலசிங்கத்தை பத்திரமாக கொண்டுபோய் சேர்த்தது யார்?
4 comments:
பத்மநாதன் தான் கொண்டுபோய்ச் சேர்த்தார்..
காற்று,மழை,புயல் எல்லாந்தாண்டி அவரைக் காப்பாற்றிக் கொண்டு சேர்த்தக் காவியத்தை அடல் அம்மையார் தன் புத்தகத்தில் வடித்துள்ளார்.
புலிகளின் செயல் வடிவத்தின் உச்சக் கட்டம் அப்போது.
இதெல்லாம் இப்ப றொம்ப முக்கியம். எழுத செய்தி இல்லாவிட்டால் சினிமாவை எழுதவும்.
இதத்தான் இப்ப முக்கியமா நீங்க ஆராய்ச்சி செஞ்சு எழுதனும்....உங்க blog பிரபல்யமாறதுக்கு இப்ப இருக்கிர ஓரே வழி இது தான்..தொடருங்க...நல்ல ஒரு அரசியல் வாதிக்கு ஏற்ற அத்திவாரம் போட்டிருக்கீங்க
Post a Comment